Skip to main content

Posts

Showing posts from July, 2021

அமுத இசை அவள்

✍️ அமுத இசை அவள் அன்பெனும்   வீணை கொண்டு எனை மீட்க அவள் மீட்டிடும் அமுத இசையில் , மீண்டும் மீண்டும் மூழ்கிப் போகிறேன் . என் அணுவில்  கலந்திட்ட  காரிகை அவளது அன்பினில் ,  கர்வம் களைந்தே காதல்  கொள்கிறேன்.. காதல் கர்வம்  கொண்டே அவளில் கரைகிறேன்.. கரையும் காதலை கண்களில் தேக்கி  காலம் யாவும் காக்கும் உரிமை உனக்கே உனக்கு.. தென்றல் . G

மனிதம் என்ன விலை ?

மனிதம் என்ன விலை? மண்ணை கூறு போட்டு , மனதை கூறு போட்டு, மனிதைத்தை கூறு போட்டு இன்று மனிதன் எனும் மிருகம் உடலையும் கூறு போட்டுக் கொண்டிருப்பதை காணும் அவல நிலையை அடைந்துவிட்டோம். மனிதத்தின் அடிப்படை அன்பு..இந்த அன்பால் உருவாகி , அன்பை போதிப்பது  குடும்பம் எனும் கோயில்.  குரங்கில் இருந்து வந்தவன் மனிதன்.. மனித பரிணாம வளர்ச்சியிலிருந்து வந்தது தான் குடும்பம்.. இன்று இந்த குடும்பம் உடைந்து மீண்டும் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோமோ??  ஒரு ஆரோக்கியமான குடும்பம் என்பது உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல. உள்ளத்தாலும் நல்ல எண்ணங்களோடு இருக்க வேண்டும்..  மனித பரிணாம வளர்ச்சயின் மாபெரும் பரிசு குடும்பம் எனும் கட்டமைப்பு. குடும்பம் என்பது உறவுகளுக்கிடையே அன்பை விதைத்து , மனிதம் கற்பிக்கும் ஒரு பயிற்சிக் கூடம். அன்னை தந்தை தான் ஒரு குழந்தையின் முதல் ஆசான். விட்டுக் கொடுப்பதும் , கஷ்டங்களில் கை கொடுப்பதும் உதவி தேவைப்படின் தயங்காமல் உதவி செய்வதும் , வளரும் குழந்தைகளுக்கு கல்வி கூடம் சொல்லித்தருவதைக் காட்டிலும் செயல் முறையில் வீட்டுச் சூழல் கற்பிக்கிறது.  வீட்...

கரை தான்டா காதல்

கரை தான்டா காதல்... கறை படியா காதல்... கரை தான்டா  கடல் அலை நீ என்றறிந்தும் காத்திருக்கவில்லை.. பார்த்திருக்கிறேன்,  கரையினில் உன்  பாதுகாவலனாக... உண்மைக் காதல் காதலை அடைய  சூழ்நிலை எதிர்ப்பார்த்து காமுகனாக காத்திராது.. எந்த சூழலிலும்  தன் காதலை பாதுகாத்திருக்கும்.. ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ சில நேரம் மூழ்கிறேன்.. சில நேரம் மிதக்கிறேன்.. எந்நேரமும் உன்  நினைவுகளில் ... மாய்க்க முடியா உன் நினைவுகளுடன் மாய்ந்து மடிந்து வாழ்கிறேன்...

இணைய வழி கல்வி முறை

இணைய வழி கல்வி முறை - மாணவர்களின் எதிர்காலம் . டிஜிட்டல் கல்வி முறை மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்கிறதா என்றால் , ஆம் என்பது தான் உண்மை. எனினும் டிஜிட்டல் கல்வி முறையின் சில எதிர்மறையான விளைவுகளை காணும் போது டிஜிட்டல் வசதி இல்லாதவரை மாணவர்களின் மனம் சீர்கேடு ஆகாமல் தவிர்க்கலாம் என்ற தான் நினைக்கத் தோன்றுகிறது. ஒருபுறம் இணையவழி கல்வி கற்க தேவையான வசதி வாய்ப்பில்லாமல் பல மாணவர்கள் வருந்துகின்றனர். மற்றொரு புறம் அணைத்து வசதிகள் இருந்தும் அதை சரிவர பயன்படுத்தாமல் சிலர்  தவறான பாதையில் செல்கின்றனர்.      ·         இந்தியாவில் கிட்டத்தட்ட 78% பள்ளிகளில் இணைய வசதிகள் இல்லை .    ·         61% க்கும் அதிகமான பள்ளிகளில் கணினிகள் இல்லை.    ·           ( UDISE ) யுடிஎஸ்இ 1.5 மில்லியனுக்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் , 8.5 மில்லியன் ஆசிரியர்கள் மற்றும் 250 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை உள்ளடக்கியது.      · ...

கவிதை வரையும் ஓவியம்

  அன்று அவள்  கண் மை  எழுதிய கவிதை இன்று கண்ணீரில்  கரைகிறது.. கரையும்  கண்ணீரில் காதலின் வாசம்.. *********************************************************** அனுதினம் வாசலில் அவளிடும்  கோலம்..  ஒரு கவிதை வரையும்  ஓவியம் .  *********************************************************** காலப்போக்கில்  காணாமல் போன  உன் கடைசி  பொழுதுபோக்கு என் காதலோ... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலனே கேட்டுக்ககொள்..  காலம் பல கடந்தாலும்,  என் கவிதைகளின்  காப்புரிமை கூட  எனக்கே உரிமையில்லா என்  காதலுக்கு மட்டுமே..   வார்த்தைகள் எனதெனினும் அதன் வதனம் அவளல்லவா!!!

பெங்களூர் சோனிக் பூம்

பெங்களூர்  சோனிக்  பூம்      ஜூலை 2, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 மணிக்குப் பிறகு, பெங்களூரின் பல பகுதிகளிலும் ஒரு உரத்த ஏற்றம் கேட்டது. நகரத்தின் பல குடியிருப்பாளர்கள் ட்விட்டரில் ஒரு உரத்த 'தட்' மற்றும் 'பூம்' சத்தம் கேட்டதாக பகிர்ந்து கொண்டனர்.        சர்ஜாப்பூர் பகுதி, ஜே.பி.நகர், பென்சன் டவுன், உல்சூர், இஸ்ரோ தளவமைப்பு, எச்.எஸ்.ஆர் லேஅவுட், தெற்கு பெங்களூரு மற்றும் கிழக்கு பெங்களூரு ஆகிய இடங்களில் இந்த சத்தம் கேட்டது என கூறுகின்றனர். நகரத்தின் மீது பறக்கும் போர் விமானத்திலிருந்து வந்த ஒலியாக, இது ஒரு 'சோனிக் பூம்' ஆக இருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன.    சோனிக் பூம் என்றால் என்ன ?        சோனிக் பூம் என்பது ஒரு பொருள் ஒலியின் வேகத்தை விட வேகமாக காற்று வழியாக பயணிக்கும்போது உருவாக்கப்பட்ட அதிர்ச்சி அலைகளுடன் தொடர்புடைய ஒலி.        சோனிக் பூம் என்பது போர் விமானத்தின் வேகமான இயக்கத்தின் விளைவாகும். இந்த பொருள்கள் ஒலியின் வேகத்தை விட வேகமாக மேல்நோக்கி பறக்கும்போது இடி ஒலியை உருவாகிறது...