Skip to main content

மனிதம் என்ன விலை ?

மனிதம் என்ன விலை?

மண்ணை கூறு போட்டு , மனதை கூறு போட்டு, மனிதைத்தை கூறு போட்டு இன்று மனிதன் எனும் மிருகம் உடலையும் கூறு போட்டுக் கொண்டிருப்பதை காணும் அவல நிலையை அடைந்துவிட்டோம்.

மனிதத்தின் அடிப்படை அன்பு..இந்த அன்பால் உருவாகி , அன்பை போதிப்பது  குடும்பம் எனும் கோயில். 

குரங்கில் இருந்து வந்தவன் மனிதன்.. மனித பரிணாம வளர்ச்சியிலிருந்து வந்தது தான் குடும்பம்.. இன்று இந்த குடும்பம் உடைந்து மீண்டும் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோமோ?? 

ஒரு ஆரோக்கியமான குடும்பம் என்பது உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல. உள்ளத்தாலும் நல்ல எண்ணங்களோடு இருக்க வேண்டும்.. 


மனித பரிணாம வளர்ச்சயின் மாபெரும் பரிசு குடும்பம் எனும் கட்டமைப்பு.

குடும்பம் என்பது உறவுகளுக்கிடையே அன்பை விதைத்து , மனிதம் கற்பிக்கும் ஒரு பயிற்சிக் கூடம். அன்னை தந்தை தான் ஒரு குழந்தையின் முதல் ஆசான். விட்டுக் கொடுப்பதும் , கஷ்டங்களில் கை கொடுப்பதும் உதவி தேவைப்படின் தயங்காமல் உதவி செய்வதும் , வளரும் குழந்தைகளுக்கு கல்வி கூடம் சொல்லித்தருவதைக் காட்டிலும் செயல் முறையில் வீட்டுச் சூழல் கற்பிக்கிறது. 

வீட்டில் போதிக்கும் ஆண் பெண் பேதம் சமூகத்திலும் தொடர்கிறது. அனைவரும் மனிதர்கள் என்ற போதனை தான் இன்றைய குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டியது. உடலாலோ உள்ளத்தாலோ யாரையும் புண்படுத்த கூடாது என்று கூறி வளர்க்க வேண்டும்.

ஆண் பெண் உறவு ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பது தான் இயற்கையின் நியதி. ஆண் பெண் உறவு என்பது வெறும் உடல் சார்ந்தது இல்லவே இல்லை. காமம், அது உடல் சார்ந்த ஒரு போதை.. இன்றைய சமூக ஊடகங்களில் பல , இதைத்தான் காதல் என்ற பெயரில் காதலை கொச்சை படுத்துகின்றனர். 

எதை பொது வெளியில் பேச வேண்டும், எந்த மாதிரியான வீடியோ காட்சிகள் பதிவிட வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் அனைத்தையும் அனைவர் முன்பும் வெளியிடுவதன் விளைவு , அரனாய் இருக்க வேண்டிய சகோதரன், தகப்பன், மாமன் என்று எந்த உறவையும் நம்பி பெண் பிள்ளைகளை விட்டு செல்ல யோசிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை நிலைத்திருக்கும். ஆனால் அந்த அன்பு எந்த தெருவில் யாருடைய அன்பிற்காக காத்திருக்கிறதோ? யார் அறிவார்.. இதுதான் இன்றைய சூழல். 

கொரான என்று பெருந்தொற்று இன்னும் மோசமான நிலையில் நிறுத்தியுள்ளது மனிதத்தை. 1000 மனிதர்கள் செய்யும் உதவியை காட்டிலும் எங்கோ ஒரு மூலையில் ஒரு மனித மிருகம் செய்யும் குற்றம் விழுங்கிவிடுகிறது.

கற்பனை செய்து பாருங்கள், ஒரு நாள் . ஒரே ஒரு நாள். நம்முடைய அனைத்து ஊடகங்களும் , ஊரில் உள்ள நல்ல செய்திகளை மட்டும் ஒளிபரப்பு செய்தால் எப்படி இருக்கும். இதையெல்லாம் கற்பனையில் மட்டுமே கான முடியும் போல..  

சங்க இலக்கியத்தில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, காட்டில் வாழும் இரு மான்கள் பற்றிய ஒரு கதை உண்டு.. 

அடர்ந்த காட்டில் ஒரு ஆண் மானும் ஒரு பெண் மானும் வெப்பத்தைக் தாள முடியாமல் தாகத்தில் தவிக்கின்றன. மான்களின் நீண்ட நேர தேடலுக்கு பின் அதன் பார்வைக்கு ஒரு சிறிய குட்டையும் அதன் அடியில் சிறிதளவு தண்ணீரும் தெரிந்தது.. மான்கள் இரண்டும் நீரிருந்த குட்டையை நெருங்கி வந்தன. அதில் ஒரு மானுக்கு மட்டுமே போதுமான நீர் இருந்தது. அந்த நீரைத் தான் அருந்தினால், பெண் மானுக்கு தண்ணீர் கிடைக்காது என்று ஆண் மானும் , தான் இந்த நீரை குடித்து விட்டால் ஆண் மானுக்கு நீர் இருக்காது என்று பெண் மானும் நினைத்து , இரு மான்களும் நீரில் வாய் வைத்து அருந்துவதுபோல் நடிக்கின்றன. நீரின் அளவு கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருக்கிறதுுுு , என்று அந்த கதை கூறுகிறது. 

அந்த மான்களின் அன்பு இன்றைய மனிதர்களுக்கிடையே இருக்கிறதா? 


Comments

Popular posts from this blog

குறும்பால் முளைத்த தென்னை மரம் - பர்மீய கதை

 இது ஒரு பர்மீயக் கதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு நாள் பர்மாவிருக்கு அருகே பர்மிஸ்ட் என்ற தீவிலிருந்து மூன்று பேரை கட்டுமரக் காரர்கள் பிடித்து வந்து அரசவையில் நிறுத்தினார்கள். அந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இருக்க , அரசர் அவர்களை பார்த்துவிட்டு " இந்த மூன்று பேரும் என்ன குற்றம் செய்தனர்? " என்று கேட்டார்.  அமைச்சர் ," அரசே.. இதை முதலில் நிற்கிறானே அவன் மக்களின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்தவன் , இந்த பெண் ஒரு சூனியக்காரி, மக்களை பயமுறுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்கினாள். இதோ இவன் சரியான குறும்புக்காரன். மக்களிடம் குறும்பு செய்து அவர்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோசம் கான்கிறவன். " என்றார். இதைக் கேட்ட மன்னர், தன் நிதியமைச்சரை அழைத்து , “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைஇந்த கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுத்துவிடுங்கள்.. அவர்கள் இருவருக்கும் இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள். வறுமையால் இவர்கள் குற்றம் செய்தனர்.அந்த வறுமையை நாம் ஒழித்துவிட்டால் இவர்கள் இனி குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் ...

கவிதை வரையும் ஓவியம்

  அன்று அவள்  கண் மை  எழுதிய கவிதை இன்று கண்ணீரில்  கரைகிறது.. கரையும்  கண்ணீரில் காதலின் வாசம்.. *********************************************************** அனுதினம் வாசலில் அவளிடும்  கோலம்..  ஒரு கவிதை வரையும்  ஓவியம் .  *********************************************************** காலப்போக்கில்  காணாமல் போன  உன் கடைசி  பொழுதுபோக்கு என் காதலோ... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலனே கேட்டுக்ககொள்..  காலம் பல கடந்தாலும்,  என் கவிதைகளின்  காப்புரிமை கூட  எனக்கே உரிமையில்லா என்  காதலுக்கு மட்டுமே..   வார்த்தைகள் எனதெனினும் அதன் வதனம் அவளல்லவா!!!

வெளவால் ஏன் தலை கீழ் தொங்குகிறது?? - பர்மீய கதை

🦇‘‘கனவில் கூட துரோகம் இழைக்க மாட்டார் என நட்பின் உறுதியைப் பற்றி கூறுவார்கள். இன்று அதெல்லாம் வெறும் கற்பனை. நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி விட்டிருக்கிறது.  🦇மனசாட்சி உள்ளவர்கள்தான் துன்பப்படுகிறார்கள். துரோகத்தின் வரலாறு மிக நெடியது.   🦇ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது.  🦇‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள் . 🦇விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது.  🦇ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன.  🦇 வெளவாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது.  🦇‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன. சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது.  🦇ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டா...