❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ மழை... என் மனமெங்கும் மண் வாசனையோடு உன் வாசம் நிரப்பிச் செல்கிறது.. ******************************************************** என் மனப்பெட்டகத்தின் முப்பது வருட நினைவுகளுக்கு மூன்றே நிமிடங்களில் மூடுவிழா நிகழ்த்தி மனம் முழுதும் உன்னை நிரப்பிவிட்டாய்... நினைவு தப்பிய நீர்ப்பரவையாய் காதல் கடலில், இவன்.. காதல் பித்தன்.. ################*****************############# என் வீட்டு கண்ணாடி காட்டிவிடாத என்னை கண்டுகொண்டேன் உன் கண்களில்.. கர்வம் கொண்டேன் உன் அண்மையில்.. ********************************************************* சாரலாய் என்னுள் சங்கமித்திருக்கும் உன் நினைவுகளுக்கும் புயலாய் எனை புரட்டி கலங்கடிக்கும் நிஜத்திற்க்கும் இடையே நிழல் இல்லா நிஜமாய் நான்.. ********************************************************** அகம் நுழைந்திட்ட அழகிய தீயே.. நீ முடிவு என்றுரைத்த முற்றுப்புள்ளியும் மூன்று புள்ளிகளாய் முன் நிற்குதடி... என்னை விட்டு நீங...
தமிழ் சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகள் , துணுக்குகள், Love quotes Tamil 2021, காதல் கவிதைகள்2021 மனிதம் காத்து மண்ணை காப்போம்