Skip to main content

வீழ்வேன் என்றே நினைத்தாயோ ( சிறுகதை)

வீழ்வேன் என்று நினைத்தாயோ? (#சிறுகதை) 

நன்றி : தென்றல் .G


“ ஹலோ சக்தி.. பஸ் வந்துடுச்சு.. நீங்க எங்க இருக்கீங்க.. சீக்கிரம் வாங்க..” என்று சக்தியிடம் பேசியவாறே “ அண்ணா.. ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.... சக்தி மேடம் வந்துடுவாங்க...” என்ற ஓட்டுனரை கேட்டுக்கொண்டான் .

 “ இதோ வந்துட்டேன் விஷ்ணு.. “ என்று போன் கால் துண்டித்து அவன் முன்னாடி நின்று “ காலை வணக்கம் தோழரே!..” புன்னகைத்தாள் சக்தி.. 

“காலை வணக்கம் சக்தி.. என்ன ஆச்சி.. எப்பவும் சீக்கிரமா வந்துடுவீங்க.. இன்னிக்கு லேட் ஆயிடுச்சு.. சரி.. உக்காருங்க.. “ என்று அவன் பின் இருக்கையில் இருந்த அவனது பையை எடுத்தான் விஷ்ணு.. 

“ ஆமா விஷ்ணு.. கோகுல் க்கு உடம்பு சரியில்ல.. எங்கயும் போக கூடாதுன்னு ஒரே அழுகை.. அம்மாகிட்ட சமாதனம் பண்ணி விட்டுட்டு வரதுக்குள்ள லேட் ஆயிடுச்சு.. சுரேஷ் எங்க காணோம்.. இன்னிக்கும் லேட்டா? ரன்னிங்ல தான் ஹீரோ என்ட்ரி குடுப்பரோ? “ ன்னு கேட்டுட்டு இருக்கும் போதே சுரேஷ் என்ட்ரி.. 

“ என்ன .. என் பேர் அடி படுற மாறி இருக்கு.. “ ன்னு கேட்டுக்கொண்டே “ என்னடா விஷ்ணு.. பஸ் இன்னிக்கு லேட்டா.. இல்லை நான் சீக்கிரமா வந்துட்டேனா.. இன்னும் பஸ் கிளம்பல..” ன்னு கேட்டான் சுரேஷ்.. 

கண்டக்டர் விசில் ஊத வண்டி கிளம்பியது.. 

“இதோ கிளம்பிடுச்சு நம்ம ஏர் இந்தியா விமானம்.... எல்லாரும் சீட் பெல்ட் போட்டுகோங்க.. நம்ம அண்ணன் வண்டி எடுத்துட்டார்.. இனிமே அடுத்த புளிய மரத்துல தான் நிக்கும்..” ன்னு கிண்டல் செய்த சக்தியை பார்த்து புன்னகைத்தவாறே டிக்கெட் குடுத்தார் கண்டக்டர். 

இருபுறமும் மலை.. அங்காங்கே சிறு சிறு அருவிகள்.. எங்கும் பச்சை நிறம்.. பல நிறங்களில் காட்டு மலர்கள்.. மூலிகை வாசனை.. ஒட்டுமொத்த இயற்கையின் வளம் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பது போன்ற ஒரு இடம்.. 

“வீட்டுல எவளோ பிரச்சினை இருந்தாலும் இந்த இயற்கையை பாக்கும் போது எல்லாம் மறந்துடுதுல்ல விஷ்ணு “ ன்னு சொல்லிக்கொண்டே “காலையில் சாப்டியா.. நான் இட்லி எடுத்து வந்துருக்கேன்.. சாப்பிடலாமா? “ கேட்டாள் சக்தி.. 

“நீங்க சாப்பிடுங்க சக்தி.. நான் வீட்டுலயே டிபன் முடிச்சிட்டேன்..” என்றான் விஷ்ணு.. 

“எடுத்துட்டு வரது 3 இட்லி. அதுல ஷேரிங் வேற.. ஒழுங்கா சாப்பிடும்மா.. “ கிண்டல் செய்தான் சுரேஷ்.. 

சக்தி, சுரேஷ், விஷ்ணு மூவரும் ஒண்ணா வேலை செய்றாங்க.. சக்தியும் சுரேஷும் கிட்டத்தட்ட 10 வருஷமா அதே கம்பெனில ஒண்ணா வேலை செய்றாங்க.. விஷ்ணு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்தான்.. ரொம்ப சீக்கிரமா சக்தி சுரேஷ் கூட ஒட்டிகிட்டான். சுரேஷ்க்கு கல்யாணம் ஆகாததால விஷ்ணு அவன் கூடவே தங்கிட்டான்..  

சக்திக்கு கோகுல் ன்னு ஒரு பையன். ரெண்டு வயசு. சக்தியோட புருஷன் அழகேசன்.. மளிகை கடை வச்சி சொந்த தொழில் பண்றாரு.. அழகேசனை பொறுத்தவரை வாழ்க்கை என்றாள் கடை, வியாபாரம் ,பணம் இது மட்டும்தான்.. சாப்பிடவும் தூங்கவும் மட்டும் வீட்டுக்கு வந்துட்டு போவான். 

காலையில், “ என்னங்க .. கோகுல் க்கு காய்ச்சலா இருக்கு.. இன்னிக்கு என்னால லீவ் போடா முடியல.. நீங்க கொஞ்சம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வாரீங்களா “ ன்னு கேட்ட அடுத்த நிமிடம் ,

“ என்னடி.. நான் என்ன வேலை வெட்டி இல்லாம இருக்கேன்னு நினைச்சியா.. இந்த அதிகாரம் பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.” ன்னு கடைக்கு கிளம்பிட்டான்..

 மனசு முழுக்க கோகுல் பத்தியே நினச்சிட்டு இருந்தது.. “ என்ன மனுஷன் இவரு.. எனக்கு லீவ் கிடைகலன்னு தானே அவர ஹாஸ்பிடல் போக சொன்னேன். பெத்த புள்ளைய விடவா வியாபாரம் முக்கியம். என்ன வாழ்க்கை இது..” ன்னு சாப்பிட மனமில்லாமல் இட்லியை பார்த்தவாறே உக்காந்துட்டு இருந்தாள் சக்தி.. 

“ சக்தி.. டிபன் பாக்ஸ் திறந்து வச்சிக்கிட்டு என்ன கனவு.. சாப்பிடலையா.. உங்க சமையல உங்களுக்கே புடிக்கலையா..” ன்னு கிண்டலடித்தான் சுரேஷ்..

 “இதெல்லாம் ஓவர். எவளோ நாள் என் சமையல் சாப்ட்ருகீங்க. என் சமையல கிண்டல் பண்றீங்களா..” ன்னு முறைத்தாள் சக்தி.. “ சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் சக்தி.. கோவிச்சுகாதிங்க “ என்றான் சுரேஷ்..

 “ம்ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்..” ன்னு சொல்லிகொண்டே இட்லியுடன் சேர்த்து அவள் வலிகளையும் சோகங்களையும் விழுங்க முயன்றாள்.

 “விஷ்ணு.. நல்ல தூக்கமா.. எழுந்துரிங்க.. நம்ம புளியமரம் ஸ்டாப்பிங் வந்துடுச்சு..” ன்னு சொல்லிகொண்டே டிரைவர் கண்டக்டர் க்கு புன்னகையில் விடையளித்து இறங்கினாள் சக்தி .. 

“ சக்தி.. இன்னிக்கு என்ன லஞ்ச் எடுத்து வந்துருக்கீங்க..” ன்னு கேட்ட சுரேஷை பார்த்து

 “சுவாமிஜி இன்னும் ஆபீஸ் கூட போகல.. அதுக்குள்ள லஞ்ச்சா.. “ ன்னு கேட்டாள் சக்தி.. 

“ நீங்க மட்டும் முழுசா மூணு இட்லி முழுங்கிட்டிங்க.. நான் ஏதும் சாப்பிடலையே..அதான் கேட்டேன் “ என்றான் பரிதாபமாக.. 

“ நான் தான் சாப்பிடலாமா ன்னு கேட்டேன்ல.. பெரிய இவரு மாறி என்ன கிண்டல் பண்ணிட்டு இப்ப பசிக்குதுன்னு பவ்யமா கேக்குறத பாரு.. இந்தாங்க.. இந்த பிஸ்கட் சாப்பிடுங்க.. ஆபீஸ் போற வரைக்கும் பசி தாங்கும்..” ன்னு பையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை நீட்டினாள்.. 

“நீங்க சொன்னா சரி.என்னடா விஷ்ணு..உனக்கும் வேணுமா..” ன்னு பவ்யமா பிஸ்கட்டை வாங்கி சாபிட்டுக்கொண்டே நடந்தனர் ஆபீஸ்க்கு. 

சக்திக்கு ஆபீஸ்ல வேலையே ஒடல. பதட்டமாவே இருந்தாள்.. “ வீட்டுக்கு போன் பண்ணி பேசிட்டு அப்புறமா வேலைய பாரு சக்தி.. எதுக்கு இவளோ டென்ஷன்.. “ ன்னு ஆறுதல் கூற வந்தான் விஷ்ணு..

 “ இல்லை விஷ்ணு.. இன்னிக்கு பையன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வாங்கன்னு சொன்னதுக்கு என்கிட்ட சண்ட போட்டுட்டு போய்ட்டாரு.. பணம் பணம் ன்னு எங்கள பத்தி அவர் யோசிக்கவே இல்லை.. இப்படியே போனா எதிர்காலம் நெனச்சா பயமா இருக்கு.. என்ன பத்தி யோசிக்க வேணாம்.. ஆனா கோகுல் குழந்தை.. இந்த வயசுல அப்பா பாசம் கிடைக்கலன்னா அவன் என்ன பாவம் பண்ணான்..” ன்னு கண்ணுல கண்ணீர் வெளியே வர காத்துட்டு இருந்தது.. இவளோ நேரம் ஆபீஸ்ல ஒருத்தர விடாம கிண்டல் பண்ணி சிரிக்க வச்சிட்டு இருந்த சக்தியா இது என்று வியப்புடன் பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு..

 “ சக்தி.. ப்ளீஸ்.. அழாதீங்க..” என்று அருகில் வந்தவன் அவள் கைகள் பிடித்து ஆறுதல் கூறினான்.. 

“சாரி விஷ்ணு..நான் ஒகே.. நீங்க வேலைய பாருங்க.. நான் அம்மாக்கு கால் பண்ணிட்டு வரேன் “ ன்னு அங்கிருந்து சென்றாள். 

அன்று முதல் விஷ்ணு சக்திகிட்ட அதிக நேரம் செலவிட்டான்.. அடிக்கடி போன் பண்றது.. காலையில் பஸ்ல ஒண்ணா சாபிடுறதுன்னு போய்ட்டு இருந்துச்சு.. சக்தியை பொறுத்த வரைக்கும் விஷ்ணு சுரேஷ் ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள் ன்னு நெனச்சா..

 “ திருமண நாள் வாழ்த்துக்கள் சக்தி.. “ ன்னு சுரேஷ் வாழ்த்து சொன்னதும் பொய்யான வாழ்க்கை வாழந்தாலும் “ நன்றி சுரேஷ்” ன்னு புன்னகைத்தாள்.. மதிய உணவு நேரம்.. சக்தி கேண்டீன்ல சுரேஷ் விஷ்ணு க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாள்.. விஷ்ணு மட்டும் வந்தான்..

 “ எங்க சுரேஷ் வரல?.. நான் இன்னிக்கு மூணு பேருக்கும் சேர்த்து லஞ்ச் எடுத்துட்டு வந்தேன்.. “ ன்னு கேட்டுக்கொண்டே சுரேஷை தேடினாள் சக்தி.. 

“சுரேஷ் ஆபீஸ் விஷயமா பேங்க் போயிருக்காரு. பேங்க் வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு போய்டுறேன் சொல்லிட்டு போயிட்டாரு.. வாங்க நாம சாபிடலாம்.. கல்யாண நாள் ஸ்பெஷலா இன்னிக்கு..ம்ம்ம் .. நல்ல வாசம்.. உங்க வீட்டுகார் குடுத்து வச்சவரு போங்க.. “ ன்னு சொல்லிக்கொண்டே அவள் பதிலுக்காக காத்திருந்தான்.. 

“ ஆமாம்.. “ என்று புன்னகைதவள் கண்களில் வேதணை மட்டுமே தெரிந்தது.. 

“என்ன சக்தி.. நீங்க சந்தோஷமா இல்லையா..? “ என்றான் விஷ்ணு..

 “ இன்னிக்கு கல்யாண நாள்ன்னு இப்ப வரைக்கும் கூட அவருக்கு தெரியாது. கல்யாணம் முடிஞ்சு 4 வருஷம் ஆச்சி.. இது வரைக்கும் ஒரு வருஷம் கூட கல்யாண நாள், பிறந்த நாள்ன்னு ஒரு வாழ்த்து சொன்னதில்ல.. எனக்கும் அப்படியே பழகிடுச்சு..எதிர்பார்ப்பும் வச்சிகுரதில்லை..” ன்னு அதே புன்னகையுடன் சொன்னாள்.

 “இந்த புன்னகையில் இன்னும் எத்தனை வேதனைகளை மறைத்து வைத்துள்ளாய் சக்தி..உன்னை நான் என் கையில் வைத்து தாங்கி கொள்கிறேன்.. ஒரு முறை சம்மதம் சொல்வாயா “ என்று அவளை பார்த்தவாறே மனதுக்குள் பேசிகொண்டிருன்தவன் , சக்தி அவனை பார்த்ததும் “சாப்பாடு அருமை சக்தி.. உங்களுக்கு ஒரு பரிசு குடுக்கணுமே..இவளோ அருமையான சமையல் செஞ்ச கைக்கு என்ன குடுக்கலாம்.. “ ன்னு யோசிப்பது போல நின்றான்..

 “நீங்க வேற எதாவது காமெடி பண்ணிட்டு.. போங்க விஷ்ணு.. “ என்று எழுந்தவளை கை பிடித்து நிருத்தினான. 

“நில் சக்தி.. நான் உன்னிடம் பேச வேண்டும்..” என்று கை பிடித்து அழைத்து சென்றவனை அதிர்ந்து பார்த்தாள் சக்தி.. 

சக்திக்கு விஷ்ணுவின் கண்களில் நட்பு தெரியவில்லை.. 

“ விஷ்ணு.. என்ன பண்ற.. கைய விடு விஷ்ணு.” ன்னு வெடுக்கென இழுத்தாள் சக்தி..

 “ சக்தி.. என்னால உன் வேதனையை புரிஞ்சுக்க முடியுது.. கவலை படாதே சக்தி.. உனக்கு எல்லாமாகவும் நான் இருப்பேன்.. எனக்கு இவளோ நல்ல சாப்பாடு போட்ட கைகளுக்கு என் இதழால் ஒரு பரிசு தர வேண்டும்.. சம்மதம் தருவாயா கண்மணியே..” என்று காதல் பார்வை பார்த்தன் விஷ்ணு.. 

“ஹஹஹா .. விஷ்ணு.. என்ன நினைத்தாய் என்னைபற்றி.. நான் என் வேதனைகளை நண்பன் என்று எண்ணி பகிர்ந்து கொன்டேனே தவிர உன் ஆறுதலுகாகவோ அல்லது உன் அரவனைபுக்காகவோ அல்ல..என்ன நினைத்தாய் என்னைப்பற்றி.. ஒரு பெண் தன் வேதனையை பகிர்ந்து கொண்டால் அதற்க்கு அவள் சுய மரியாதை சுய கௌரவம் அற்றவள் என்று என்னும் ஈன பிறவியில் நீயும் ஒன்றா?? இதை எதிர் பார்க்கவில்லை உன்னிடம்.. எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துவிட்டாய்.. அதற்கு நன்றி.. இன்று நம் நட்புக்கு இறந்த நாள் என்று வைத்துக்கொள்ளலாம்.. “ என்று சொல்லிக்கொண்டே வந்த அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.. 

விஷ்ணு முகத்தில் ஈ ஆட வில்லை.. என்ன செய்தேன் நான். ஏன் இப்படி செய்தேன்.. எனக்கு மன்னிப்பு கேட்க கூட வாய்ப்பில்லாமல் எவளோ பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று வெட்கி தலை குனிந்தான்..

 மறுநாள் காலை பேருந்தில் விஷ்ணு .. “காலை வணக்கம் சக்தி..” என்றவனிடம் “வணக்கம் சார் ”.. என்றாள் சக்தி. 

“ சக்தி.. காலை வணக்கம்.. இன்னிக்கு சாயங்காலம் நம்ம நாடக சபாவில் ஒரு நாடகம் புக் பண்ணிருக்கேன்.. அம்மாவையும் கோகுல்லயும் கூட்டிட்டு வரிங்களா..” என்றான் சுரேஷ்.. 

“ ஹஹா..கோகுல் வச்சிட்டு நாடகமா.. நான் அவன பாக்கவே சரியாய் இருக்கும்.. அம்மாவை மட்டும் அனுப்புறேன். என்ன நாடகம்..? “ ன்னு கேட்டாள்..

 “ வீழ்வேன் என்று நினைத்தாயோ..? – ஒரு பெண்ணின் சுய மரியாதை பற்றிய நாடகம்..” என்றவனிடம்

 “ அருமை.. விஷ்ணுவை கூட்டிட்டு போங்க சுரேஷ்..” என்று விஷ்ணுவை நோக்கி நக்கலாக ஒரு பார்வையை பார்த்துவிட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இயற்கையை ரசித்தவாறே அவள் பயணத்தை தொடர்ந்தாள்.. 

கவிதைகள்


“தேடி சோறு தினம் தின்று 

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, 

வாடி துன்பம் மிக உழன்று  

பிறர் வாட பல செய்கை செய்து, 

நரை கூடி கிழப்பருவம் எய்தி 

கொடும் கூற்றுக்கிரையாகி மாயும், 

சில வேடிக்கை மனிதரை போலவே 

நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"

 ******************************





Comments

Popular posts from this blog

குறும்பால் முளைத்த தென்னை மரம் - பர்மீய கதை

 இது ஒரு பர்மீயக் கதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு நாள் பர்மாவிருக்கு அருகே பர்மிஸ்ட் என்ற தீவிலிருந்து மூன்று பேரை கட்டுமரக் காரர்கள் பிடித்து வந்து அரசவையில் நிறுத்தினார்கள். அந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இருக்க , அரசர் அவர்களை பார்த்துவிட்டு " இந்த மூன்று பேரும் என்ன குற்றம் செய்தனர்? " என்று கேட்டார்.  அமைச்சர் ," அரசே.. இதை முதலில் நிற்கிறானே அவன் மக்களின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்தவன் , இந்த பெண் ஒரு சூனியக்காரி, மக்களை பயமுறுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்கினாள். இதோ இவன் சரியான குறும்புக்காரன். மக்களிடம் குறும்பு செய்து அவர்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோசம் கான்கிறவன். " என்றார். இதைக் கேட்ட மன்னர், தன் நிதியமைச்சரை அழைத்து , “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைஇந்த கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுத்துவிடுங்கள்.. அவர்கள் இருவருக்கும் இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள். வறுமையால் இவர்கள் குற்றம் செய்தனர்.அந்த வறுமையை நாம் ஒழித்துவிட்டால் இவர்கள் இனி குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் ...

கவிதை வரையும் ஓவியம்

  அன்று அவள்  கண் மை  எழுதிய கவிதை இன்று கண்ணீரில்  கரைகிறது.. கரையும்  கண்ணீரில் காதலின் வாசம்.. *********************************************************** அனுதினம் வாசலில் அவளிடும்  கோலம்..  ஒரு கவிதை வரையும்  ஓவியம் .  *********************************************************** காலப்போக்கில்  காணாமல் போன  உன் கடைசி  பொழுதுபோக்கு என் காதலோ... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலனே கேட்டுக்ககொள்..  காலம் பல கடந்தாலும்,  என் கவிதைகளின்  காப்புரிமை கூட  எனக்கே உரிமையில்லா என்  காதலுக்கு மட்டுமே..   வார்த்தைகள் எனதெனினும் அதன் வதனம் அவளல்லவா!!!

வெளவால் ஏன் தலை கீழ் தொங்குகிறது?? - பர்மீய கதை

🦇‘‘கனவில் கூட துரோகம் இழைக்க மாட்டார் என நட்பின் உறுதியைப் பற்றி கூறுவார்கள். இன்று அதெல்லாம் வெறும் கற்பனை. நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி விட்டிருக்கிறது.  🦇மனசாட்சி உள்ளவர்கள்தான் துன்பப்படுகிறார்கள். துரோகத்தின் வரலாறு மிக நெடியது.   🦇ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது.  🦇‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள் . 🦇விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது.  🦇ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன.  🦇 வெளவாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது.  🦇‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன. சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது.  🦇ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டா...