Skip to main content

Posts

அமுத இசை அவள்

✍️ அமுத இசை அவள் அன்பெனும்   வீணை கொண்டு எனை மீட்க அவள் மீட்டிடும் அமுத இசையில் , மீண்டும் மீண்டும் மூழ்கிப் போகிறேன் . என் அணுவில்  கலந்திட்ட  காரிகை அவளது அன்பினில் ,  கர்வம் களைந்தே காதல்  கொள்கிறேன்.. காதல் கர்வம்  கொண்டே அவளில் கரைகிறேன்.. கரையும் காதலை கண்களில் தேக்கி  காலம் யாவும் காக்கும் உரிமை உனக்கே உனக்கு.. தென்றல் . G

மனிதம் என்ன விலை ?

மனிதம் என்ன விலை? மண்ணை கூறு போட்டு , மனதை கூறு போட்டு, மனிதைத்தை கூறு போட்டு இன்று மனிதன் எனும் மிருகம் உடலையும் கூறு போட்டுக் கொண்டிருப்பதை காணும் அவல நிலையை அடைந்துவிட்டோம். மனிதத்தின் அடிப்படை அன்பு..இந்த அன்பால் உருவாகி , அன்பை போதிப்பது  குடும்பம் எனும் கோயில்.  குரங்கில் இருந்து வந்தவன் மனிதன்.. மனித பரிணாம வளர்ச்சியிலிருந்து வந்தது தான் குடும்பம்.. இன்று இந்த குடும்பம் உடைந்து மீண்டும் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோமோ??  ஒரு ஆரோக்கியமான குடும்பம் என்பது உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல. உள்ளத்தாலும் நல்ல எண்ணங்களோடு இருக்க வேண்டும்..  மனித பரிணாம வளர்ச்சயின் மாபெரும் பரிசு குடும்பம் எனும் கட்டமைப்பு. குடும்பம் என்பது உறவுகளுக்கிடையே அன்பை விதைத்து , மனிதம் கற்பிக்கும் ஒரு பயிற்சிக் கூடம். அன்னை தந்தை தான் ஒரு குழந்தையின் முதல் ஆசான். விட்டுக் கொடுப்பதும் , கஷ்டங்களில் கை கொடுப்பதும் உதவி தேவைப்படின் தயங்காமல் உதவி செய்வதும் , வளரும் குழந்தைகளுக்கு கல்வி கூடம் சொல்லித்தருவதைக் காட்டிலும் செயல் முறையில் வீட்டுச் சூழல் கற்பிக்கிறது.  வீட்...

கரை தான்டா காதல்

கரை தான்டா காதல்... கறை படியா காதல்... கரை தான்டா  கடல் அலை நீ என்றறிந்தும் காத்திருக்கவில்லை.. பார்த்திருக்கிறேன்,  கரையினில் உன்  பாதுகாவலனாக... உண்மைக் காதல் காதலை அடைய  சூழ்நிலை எதிர்ப்பார்த்து காமுகனாக காத்திராது.. எந்த சூழலிலும்  தன் காதலை பாதுகாத்திருக்கும்.. ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ சில நேரம் மூழ்கிறேன்.. சில நேரம் மிதக்கிறேன்.. எந்நேரமும் உன்  நினைவுகளில் ... மாய்க்க முடியா உன் நினைவுகளுடன் மாய்ந்து மடிந்து வாழ்கிறேன்...

இணைய வழி கல்வி முறை

இணைய வழி கல்வி முறை - மாணவர்களின் எதிர்காலம் . டிஜிட்டல் கல்வி முறை மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்கிறதா என்றால் , ஆம் என்பது தான் உண்மை. எனினும் டிஜிட்டல் கல்வி முறையின் சில எதிர்மறையான விளைவுகளை காணும் போது டிஜிட்டல் வசதி இல்லாதவரை மாணவர்களின் மனம் சீர்கேடு ஆகாமல் தவிர்க்கலாம் என்ற தான் நினைக்கத் தோன்றுகிறது. ஒருபுறம் இணையவழி கல்வி கற்க தேவையான வசதி வாய்ப்பில்லாமல் பல மாணவர்கள் வருந்துகின்றனர். மற்றொரு புறம் அணைத்து வசதிகள் இருந்தும் அதை சரிவர பயன்படுத்தாமல் சிலர்  தவறான பாதையில் செல்கின்றனர்.      ·         இந்தியாவில் கிட்டத்தட்ட 78% பள்ளிகளில் இணைய வசதிகள் இல்லை .    ·         61% க்கும் அதிகமான பள்ளிகளில் கணினிகள் இல்லை.    ·           ( UDISE ) யுடிஎஸ்இ 1.5 மில்லியனுக்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் , 8.5 மில்லியன் ஆசிரியர்கள் மற்றும் 250 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை உள்ளடக்கியது.      · ...

கவிதை வரையும் ஓவியம்

  அன்று அவள்  கண் மை  எழுதிய கவிதை இன்று கண்ணீரில்  கரைகிறது.. கரையும்  கண்ணீரில் காதலின் வாசம்.. *********************************************************** அனுதினம் வாசலில் அவளிடும்  கோலம்..  ஒரு கவிதை வரையும்  ஓவியம் .  *********************************************************** காலப்போக்கில்  காணாமல் போன  உன் கடைசி  பொழுதுபோக்கு என் காதலோ... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலனே கேட்டுக்ககொள்..  காலம் பல கடந்தாலும்,  என் கவிதைகளின்  காப்புரிமை கூட  எனக்கே உரிமையில்லா என்  காதலுக்கு மட்டுமே..   வார்த்தைகள் எனதெனினும் அதன் வதனம் அவளல்லவா!!!

பெங்களூர் சோனிக் பூம்

பெங்களூர்  சோனிக்  பூம்      ஜூலை 2, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 மணிக்குப் பிறகு, பெங்களூரின் பல பகுதிகளிலும் ஒரு உரத்த ஏற்றம் கேட்டது. நகரத்தின் பல குடியிருப்பாளர்கள் ட்விட்டரில் ஒரு உரத்த 'தட்' மற்றும் 'பூம்' சத்தம் கேட்டதாக பகிர்ந்து கொண்டனர்.        சர்ஜாப்பூர் பகுதி, ஜே.பி.நகர், பென்சன் டவுன், உல்சூர், இஸ்ரோ தளவமைப்பு, எச்.எஸ்.ஆர் லேஅவுட், தெற்கு பெங்களூரு மற்றும் கிழக்கு பெங்களூரு ஆகிய இடங்களில் இந்த சத்தம் கேட்டது என கூறுகின்றனர். நகரத்தின் மீது பறக்கும் போர் விமானத்திலிருந்து வந்த ஒலியாக, இது ஒரு 'சோனிக் பூம்' ஆக இருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன.    சோனிக் பூம் என்றால் என்ன ?        சோனிக் பூம் என்பது ஒரு பொருள் ஒலியின் வேகத்தை விட வேகமாக காற்று வழியாக பயணிக்கும்போது உருவாக்கப்பட்ட அதிர்ச்சி அலைகளுடன் தொடர்புடைய ஒலி.        சோனிக் பூம் என்பது போர் விமானத்தின் வேகமான இயக்கத்தின் விளைவாகும். இந்த பொருள்கள் ஒலியின் வேகத்தை விட வேகமாக மேல்நோக்கி பறக்கும்போது இடி ஒலியை உருவாகிறது...

அகம் நுழைந்திட்ட அழகிய தீயே

 ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ மழை... என் மனமெங்கும் மண் வாசனையோடு உன்  வாசம்  நிரப்பிச் செல்கிறது.. ******************************************************** என் மனப்பெட்டகத்தின் முப்பது வருட  நினைவுகளுக்கு  மூன்றே  நிமிடங்களில் மூடுவிழா நிகழ்த்தி மனம் முழுதும் உன்னை  நிரப்பிவிட்டாய்...   நினைவு தப்பிய  நீர்ப்பரவையாய்  காதல் கடலில்,  இவன்.. காதல் பித்தன்.. ################*****************############# என் வீட்டு  கண்ணாடி காட்டிவிடாத என்னை கண்டுகொண்டேன்  உன் கண்களில்.. கர்வம் கொண்டேன் உன் அண்மையில்..  ********************************************************* சாரலாய் என்னுள் சங்கமித்திருக்கும்  உன் நினைவுகளுக்கும் புயலாய் எனை புரட்டி கலங்கடிக்கும் நிஜத்திற்க்கும் இடையே நிழல் இல்லா  நிஜமாய் நான்.. ********************************************************** அகம் நுழைந்திட்ட   அழகிய தீயே.. நீ முடிவு என்றுரைத்த முற்றுப்புள்ளியும் மூன்று புள்ளிகளாய்  முன் நிற்குதடி... என்னை விட்டு நீங...

கடவுளை பார்க்கவேண்டும் - தென்கச்சி கோ சுவாமிநாதன்

  ‘கடவுளைப் பார்க்கவேண்டும்’ என்று விரும்பினான் ஒருவன்.  அவனை சந்தித்த ஞானி ஒருவர், "கடவுளைப் பார்ப்பது இருக்கட்டும். முன்னதாக கடலைப் பார்க்கலாம் வா!" என்று அழைத்துச் சென்றார்.  இருவரும் கடற்கரையை அடைந்ததும், ஞானி ஒரு கதை கூறினார்: "இந்தக் கடலில் வசிக்கும் ஒரு மீனுக்கு, ‘கடல் எங்கே இருக்கிறது?’ என்று அறிய ஆவல். பலரையும் கேட்டுப் பார்த்தது. ‘நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் அது எங்கே இருக்கிறது என்றுதான் தெரியவில்லை’ என்றே பதில் வந்தது. " ஏமாற்றத்துடன் அங்குமிங்கும் அலைந்துகொண்டு இருந்த மீனின் எதிரில், வேறொரு பெரிய மீன் வந்தது. பார்ப்பதற்கு கொஞ்சம் அனுபவசாலி போலத் தோன்றியதால், அந்தப் பெரிய மீனிடமும் தனது கேள்வியைக் கேட்டது சிறிய மீன்.  "சற்றே யோசித்த பெரிய மீன், ‘நீ அங்கேதான் பிறந்தாய்; அங்கேதான் வளர்கிறாய்; அங்கேதான் மறையப் போகிறாய்!’ என்றது. இந்த பதிலில் திருப்தி இல்லாத சிறிய மீன் மீண்டும் ‘சரி, அது எங்கே இருக்கிறது?’ கேட்டது: " ‘அது தெரியாது!’ என்ற பெரிய மீன், அங்கிருந்து நழுவியது.  இனி, யாரைக் கேட்கலாம் என்று சிந்தித்தபடி நீந்திய அந்த மீன் எதிர்...

வீழ்வேன் என்றே நினைத்தாயோ ( சிறுகதை)

வீழ்வேன் என்று நினைத்தாயோ? (#சிறுகதை)  நன்றி : தென்றல் .G “ ஹலோ சக்தி.. பஸ் வந்துடுச்சு.. நீங்க எங்க இருக்கீங்க.. சீக்கிரம் வாங்க..” என்று சக்தியிடம் பேசியவாறே “ அண்ணா.. ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.... சக்தி மேடம் வந்துடுவாங்க...” என்ற ஓட்டுனரை கேட்டுக்கொண்டான் .  “ இதோ வந்துட்டேன் விஷ்ணு.. “ என்று போன் கால் துண்டித்து அவன் முன்னாடி நின்று “ காலை வணக்கம் தோழரே!..” புன்னகைத்தாள் சக்தி..  “காலை வணக்கம் சக்தி.. என்ன ஆச்சி.. எப்பவும் சீக்கிரமா வந்துடுவீங்க.. இன்னிக்கு லேட் ஆயிடுச்சு.. சரி.. உக்காருங்க.. “ என்று அவன் பின் இருக்கையில் இருந்த அவனது பையை எடுத்தான் விஷ்ணு..  “ ஆமா விஷ்ணு.. கோகுல் க்கு உடம்பு சரியில்ல.. எங்கயும் போக கூடாதுன்னு ஒரே அழுகை.. அம்மாகிட்ட சமாதனம் பண்ணி விட்டுட்டு வரதுக்குள்ள லேட் ஆயிடுச்சு.. சுரேஷ் எங்க காணோம்.. இன்னிக்கும் லேட்டா? ரன்னிங்ல தான் ஹீரோ என்ட்ரி குடுப்பரோ? “ ன்னு கேட்டுட்டு இருக்கும் போதே சுரேஷ் என்ட்ரி..  “ என்ன .. என் பேர் அடி படுற மாறி இருக்கு.. “ ன்னு கேட்டுக்கொண்டே “ என்னடா விஷ்ணு.. பஸ் இன்னிக்கு லேட்டா.. இல்லை நான் சீக்க...

இருக்க கூடாத இடமாற்றம் - தென்கச்சி கோ சுவாமிநாதன்

இருக்க கூடாத இடமாற்றம் - திரு. தென்கச்சி கோ சுவாமிநாதன் தத்துவப் பேராசிரியர் ஒருவர், அதிகாலையில் வாக்கிங் செல்வது வழக்கம்.  தினமும் ஒரு மணி நேர நடைப் பயிற்சிக்குப் பின், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அன்றாடப் பணிகளில் ஈடுபடுவார்.  அன்றும் வழக்கம் போல் கையில் ஊன்று கோலுடன் கிளம்பியவர், வாக்கிங் முடித்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.  மிகவும் களைப்பாக இருந்தது! வீட்டுக்குச் சென்றதும், ஊன்றுகோலை சுவரில் ஒரு மூலையில் சாய்த்து வைத்துவிட்டு, அப்படியே படுக்கையில் விழுந்து சிறிது ஓய்வெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டார் பேராசிரியர்.  இதோ! வீடு வந்துவிட்டது! நேராக படுக்கை அறைக்குச் சென்றவர் ஊன்று கோலைப் படுக்கையில் வைத்தார். பிறகு, அருகிலிருந்த சுவரில் அப்படியே சாய்ந்து நின்று, கண்களை மூடிக் கொண்டார்!  பேராசிரியரின் திட்டம் சரிதான்; ஆனால், அதை செயல்படுத்திய விதத்தில்தான் குழப்பம். அவர் படுக்க வேண்டிய இடத்தில் ஊன்றுகோல். ஊன்றுகோல் நிற்க வேண்டிய இடத்தில் பேராசிரியர்!  அப்போது, அந்த அறைக்கு வந்த பேராசிரியரின் மனைவி, சுவர் ஓரத்தில் கண் மூடி நிற்கும் கணவரைப் பார...

மயங்காதே மனமே- தென்கச்சி கோ சுவாமிநாதன்

✍️ மயங்காதே மனமே - தென்கச்சி கோ சுவாமிநாதன் ‘என்னை எவரும் அசைக்க முடியாது’ என்று சவால் விடும் மனிதர்கள் ஏராளம்! ஆனால், இவர்களின் நிலை இறுதிவரை இப்படியே இருக்குமா?? ‘நம்மை, வேறு எவரோ ஒருவர் அசைத்துக்கொண்டு இருக்கிறார்!’ என்று எண்ணச் சொல்கிறது ஆன்மிகம். இந்த எண்ணமே அகந்தையைக் குறைக்க உதவுகிறது.  ஷ்மெல்னோ என்ற யூத மத குரு ஒருவர், அந்த ஊருக்கு வந்தார். இதையறிந்த ஊர் மக்கள் ஒன்று கூடினர்.  "நம்ம ஊருக்குப் புதுசா வந்திருக்கிற அந்த குருவை வரவேற்கணும். என்ன செய்யலாம்?" என்று கேட்டார் ஒருவர்.  "இன்று மாலை, அவருக்குப் பாராட்டு விழா நடத்துவோம்" என்றார் மற்றொருவர்.  அனைவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, குருவை நேரில் சந்தித்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். அவரும் சம்மதித்தார்.  அவ்வளவுதான்! அனைவரும் உற்சாகத்துடன் விழா ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தனர். அதே நேரம், அந்த குரு, ஓர் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டார்.  சிலர், அவருக்காக வெளியே காத்திருந்தனர். அறைக்குள் இருந்து ஏதேதோ சத்தம் வந்துகொண்டு இருந்தது!  குரு, தனக்குத் தானே ஏதோ பேசுவது போல் இருந்தது....

சீட்டு சாமியார் - தென்கச்சி கோ சுவாமிநாதன்

  சீட்டு சாமியார் - தென்கச்சி கோ சுவாமிநாதன் "இவ்ளோ அவசரமா எங்கே போறே?" வேகமாக ஓடும் ஆசாமி ஒருவனை வழிமறித்துக் கேட்டார் நம்மவர்.  "சேதி தெரியாதா உங்களுக்கு? நம்ம ஊருக்குப் புதுசா சாமியார் ஒருத்தர் வந்திருக்கார். அவரைப் பார்க்கத்தான் எல்லோரும் போய்க்கிட்டிருக்கோம்." என்று மூச்சிரைக்கத் தெரிவித்தார் ஓடி வந்தவர்.  "அதுக்கு ஏன் இப்படி ஓடறீங்க?" "சீட்டு தீர்ந்துபோச்சுன்னா?"  "என்னது சீட்டா?"  "ஆமாம்! அந்த சாமியார் சீட்டு விற்கிறார். ஒரு சீட்டு 100 ரூபாய்! அதை வாங்கினா, இதுவரைக்கும் செஞ்ச பாவம்லாம் போயிடும். பேசறதுக்கு நேரமில்லே. ஓடி வா என் கூட."  இருவரும் ஊர் எல்லைக்கு ஓடினர். அங்கிருந்த ஒரு மண்டபத்தில், மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். உள்ளே சாமியார், மளமளவென சீட்டுகளை விற்றுக்கொண்டு இருந்தார். கூட்டத்தில் முண்டியடித்து சீட்டு வாங்கியவர்கள், ‘அப்பாடா!’ என்ற நிம்மதியுடன் வெளியே வந்து கொண்டிருந்தனர்.  நம்மவரும் அடித்துப் பிடித்து உள்ளே புகுந்தார். "எனக்கு ரெண்டு சீட்டு கொடுங்க" என்று 200 ரூபாயை நீட்டியவர், சீட்டை வாங்...

குறும்பால் முளைத்த தென்னை மரம் - பர்மீய கதை

 இது ஒரு பர்மீயக் கதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு நாள் பர்மாவிருக்கு அருகே பர்மிஸ்ட் என்ற தீவிலிருந்து மூன்று பேரை கட்டுமரக் காரர்கள் பிடித்து வந்து அரசவையில் நிறுத்தினார்கள். அந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இருக்க , அரசர் அவர்களை பார்த்துவிட்டு " இந்த மூன்று பேரும் என்ன குற்றம் செய்தனர்? " என்று கேட்டார்.  அமைச்சர் ," அரசே.. இதை முதலில் நிற்கிறானே அவன் மக்களின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்தவன் , இந்த பெண் ஒரு சூனியக்காரி, மக்களை பயமுறுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்கினாள். இதோ இவன் சரியான குறும்புக்காரன். மக்களிடம் குறும்பு செய்து அவர்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோசம் கான்கிறவன். " என்றார். இதைக் கேட்ட மன்னர், தன் நிதியமைச்சரை அழைத்து , “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைஇந்த கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுத்துவிடுங்கள்.. அவர்கள் இருவருக்கும் இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள். வறுமையால் இவர்கள் குற்றம் செய்தனர்.அந்த வறுமையை நாம் ஒழித்துவிட்டால் இவர்கள் இனி குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் ...

வெளவால் ஏன் தலை கீழ் தொங்குகிறது?? - பர்மீய கதை

🦇‘‘கனவில் கூட துரோகம் இழைக்க மாட்டார் என நட்பின் உறுதியைப் பற்றி கூறுவார்கள். இன்று அதெல்லாம் வெறும் கற்பனை. நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி விட்டிருக்கிறது.  🦇மனசாட்சி உள்ளவர்கள்தான் துன்பப்படுகிறார்கள். துரோகத்தின் வரலாறு மிக நெடியது.   🦇ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது.  🦇‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள் . 🦇விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது.  🦇ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன.  🦇 வெளவாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது.  🦇‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன. சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது.  🦇ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டா...

நினைவில் நின்ற காதலே..

கொஞ்சியே எனைக்  கொன்றவள் ,  ஏனோ, கெஞ்சியே எனைப் புதைத்துவிட்டாள்.. மண்ணில் என்னையும்.. மனதில் அவள் காதலையும்.. வஞ்சி அவள்  எனை  மிஞ்சி போன பின்னே , எஞ்சிய உயிரின்  உளறல்கள் யாவும்  உடைந்து போன ஆடியாய் ,  அனைத்திலும்  அவள் பிம்பமே... **************************************** முகவரி தொலைத்த  முகிலினமாய்,  மனதில் மிதந்து  வரும் உன் நினைவுகள்,  தென்றலோடு சாராலாய்  சில நேரம்...  புயலோடு பெருமழையாய்  சில நேரம்...  அழகான ஆழமான உன்  அன்பின் ,  வலியையும்  வரமாக்கிக் கொண்டேன்.. ************************************************* விழித்தெழும் போதே  விழித்துக் கொள்ளும்  உன் நினைவுகள் கூட  மௌனித்து போனதில்  ஊமையாகி உறைந்து  உடைந்து போகிறேன்.  மரணம் கூட கொடிதல்ல  மனமே , உன் மௌனத்தின் முன்.. *********************************************** கனவிலும் நிஜத்திலும்  தவிர்த்து வந்த உன் முகம்  மூடிய இமைகளுக்குள்  முழுவதுமாய் நிறைந்திருக்க , இமை மூட மறுக்கிறேன்.  நா...