Skip to main content

இருக்க கூடாத இடமாற்றம் - தென்கச்சி கோ சுவாமிநாதன்

இருக்க கூடாத இடமாற்றம் - திரு. தென்கச்சி கோ சுவாமிநாதன்

தத்துவப் பேராசிரியர் ஒருவர், அதிகாலையில் வாக்கிங் செல்வது வழக்கம். 

தினமும் ஒரு மணி நேர நடைப் பயிற்சிக்குப் பின், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அன்றாடப் பணிகளில் ஈடுபடுவார். 

அன்றும் வழக்கம் போல் கையில் ஊன்று கோலுடன் கிளம்பியவர், வாக்கிங் முடித்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். 

மிகவும் களைப்பாக இருந்தது! வீட்டுக்குச் சென்றதும், ஊன்றுகோலை சுவரில் ஒரு மூலையில் சாய்த்து வைத்துவிட்டு, அப்படியே படுக்கையில் விழுந்து சிறிது ஓய்வெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டார் பேராசிரியர். 

இதோ! வீடு வந்துவிட்டது! நேராக படுக்கை அறைக்குச் சென்றவர் ஊன்று கோலைப் படுக்கையில் வைத்தார். பிறகு, அருகிலிருந்த சுவரில் அப்படியே சாய்ந்து நின்று, கண்களை மூடிக் கொண்டார்! 

பேராசிரியரின் திட்டம் சரிதான்; ஆனால், அதை செயல்படுத்திய விதத்தில்தான் குழப்பம். அவர் படுக்க வேண்டிய இடத்தில் ஊன்றுகோல். ஊன்றுகோல் நிற்க வேண்டிய இடத்தில் பேராசிரியர்! 

அப்போது, அந்த அறைக்கு வந்த பேராசிரியரின் மனைவி, சுவர் ஓரத்தில் கண் மூடி நிற்கும் கணவரைப் பார்த்ததும் அதிர்ந்தார்.

 "ஐயையோ! என்ன ஆச்சு உங்களுக்கு?" என்று அலறினார். 

சத்தம் கேட்டு கண் விழித்த பேராசிரியர், மெதுவாகச் சொன்னார்: "ஏன் சத்தம் போடறே? வாக்கிங் போனது கொஞ்சம் களைப்பா இருந்துச்சு. அதான், வாக்கிங் ஸ்டிக்கை சுவத்துல சாத்தி வெச்சுட்டு, நான் ‘பெட்’ல ‘ரெஸ்ட்’ எடுத்துக்கிட்டிருக்கேன்!" 

அந்தப் பெண்மணி, கணவரின் செயலைக் கண்டு, தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 இது உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்! "வெளியே நடைபெறுகிற இந்த இட மாற்றம் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நம் உள்ளே நடைபெறும் ஓர் இடமாற்றம் வேதனை அளிக்கிறது.இன்றைய மனிதர்களுக்கு இதயமும், வாயும் இடம் மாறி இருப்பதே காரணம்!" என்றார் பெரியவர் ஒருவர். 

இதைக் கேட்டவர்களுக்குக் குழப்பம்! அந்தப் பெரியவரே தொடர்ந்தார்: 

"இதயத்தைத் திறந்து வையுங்கள். வாயை மூடி வையுங்கள் என்று கூறினால், நாம் என்ன செய்கிறோம்? வாயைத் திறந்து வைக்கிறோம். இதயத்தையோ மூடி வைத்திருக்கிறோம்!"

Love quotes Tamil

என்றார்.



Comments

Popular posts from this blog

குறும்பால் முளைத்த தென்னை மரம் - பர்மீய கதை

 இது ஒரு பர்மீயக் கதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு நாள் பர்மாவிருக்கு அருகே பர்மிஸ்ட் என்ற தீவிலிருந்து மூன்று பேரை கட்டுமரக் காரர்கள் பிடித்து வந்து அரசவையில் நிறுத்தினார்கள். அந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இருக்க , அரசர் அவர்களை பார்த்துவிட்டு " இந்த மூன்று பேரும் என்ன குற்றம் செய்தனர்? " என்று கேட்டார்.  அமைச்சர் ," அரசே.. இதை முதலில் நிற்கிறானே அவன் மக்களின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்தவன் , இந்த பெண் ஒரு சூனியக்காரி, மக்களை பயமுறுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்கினாள். இதோ இவன் சரியான குறும்புக்காரன். மக்களிடம் குறும்பு செய்து அவர்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோசம் கான்கிறவன். " என்றார். இதைக் கேட்ட மன்னர், தன் நிதியமைச்சரை அழைத்து , “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைஇந்த கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுத்துவிடுங்கள்.. அவர்கள் இருவருக்கும் இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள். வறுமையால் இவர்கள் குற்றம் செய்தனர்.அந்த வறுமையை நாம் ஒழித்துவிட்டால் இவர்கள் இனி குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் ...

கவிதை வரையும் ஓவியம்

  அன்று அவள்  கண் மை  எழுதிய கவிதை இன்று கண்ணீரில்  கரைகிறது.. கரையும்  கண்ணீரில் காதலின் வாசம்.. *********************************************************** அனுதினம் வாசலில் அவளிடும்  கோலம்..  ஒரு கவிதை வரையும்  ஓவியம் .  *********************************************************** காலப்போக்கில்  காணாமல் போன  உன் கடைசி  பொழுதுபோக்கு என் காதலோ... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலனே கேட்டுக்ககொள்..  காலம் பல கடந்தாலும்,  என் கவிதைகளின்  காப்புரிமை கூட  எனக்கே உரிமையில்லா என்  காதலுக்கு மட்டுமே..   வார்த்தைகள் எனதெனினும் அதன் வதனம் அவளல்லவா!!!

வெளவால் ஏன் தலை கீழ் தொங்குகிறது?? - பர்மீய கதை

🦇‘‘கனவில் கூட துரோகம் இழைக்க மாட்டார் என நட்பின் உறுதியைப் பற்றி கூறுவார்கள். இன்று அதெல்லாம் வெறும் கற்பனை. நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி விட்டிருக்கிறது.  🦇மனசாட்சி உள்ளவர்கள்தான் துன்பப்படுகிறார்கள். துரோகத்தின் வரலாறு மிக நெடியது.   🦇ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது.  🦇‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள் . 🦇விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது.  🦇ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன.  🦇 வெளவாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது.  🦇‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன. சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது.  🦇ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டா...