❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
முரணுக்கு முன் மாதிரி என்னவள்
துக்கங்களும்
கண்களில் வழிந்து
காற்றில் கரைந்தன..
முடிவிலா கவிதை
எனக்கே
எனக்கு என
நான் எழுதிய
என் முழு முதல்
முடிவிலா
கவிதை ,
என் காதல்..
பிழை நீக்கம்
செய்யப்பட்ட
காதல் கவிதை
ஒன்றின்,
நீக்கப்பட்ட
பிழையாய் நான்..
- தென்றல் G
******************************************
காதலே காதல் செய்
இதழ்கள் உதிர்ந்த பின்னும்
காம்பு தாங்கி நிற்கும் செடிக்குத்
தெரியும் மலரும் மலர்கள்
உதிரக்கூடும் என்று.
எனினும்
அவை மலர்வதை தவிர்ப்பதில்லை..
பிரித்து வைக்க எத்தனிக்கும்
காலமும் உன் காதலை
காதலிக்கும் படி காதலித்து விடு..
- தென்றல் G
காலம் சென்ற என் காதலியே ...
அன்று,
காற்றில் கலந்து வந்த
உன் காதலில் தொலைத்த
என் இயல்பைத் தேடி
தவித்த மனதிற்கு
புரியவில்லை,
தொலைந்த இயல்பை தேடி,
இருக்கும் இதயத்தை
தொலைக்க நேருமென்று..
இதோ இன்று..
இயல்பை மீட்டு தந்து
இதயம் கொண்டு(று) சென்றாய்..
இரும்பாய இருந்தவனை
உருக்கி உண்ணில்
இளகச் செய்ததும் நீயே...
இன்று மீண்டும்
என்னை இருகச் செய்து
காற்றோடு கலந்தந்தும் நீயே...
-தென்றல் G
யார் நீ...
என் கனவுகளை
கொள்ளைகொண்டாய்..
என் நினைவுகளில்
நிரம்பி வழிந்தாய்..
என் பொழுதுகளை
உறையச் செய்தாய்...
என்னில் இருந்த என்னை
தொலைக்கச் செய்தாய்...
என்னை தொலைத்து
தொலைந்தும் போனாய்..
யார் நீ...
என்னை நானே
கேட்டுக் கொள்கிறேன்
யார் நீ...
பதில் சொல்ல தான்
நான் இல்லை...
வேறொரு இடத்தில்
நீ நீயாய் இருக்க ,
என்னிடத்தில்
வெறும் கூடாய் நான்..
மீட்டெடுக்க நீயுமில்லை..
மீண்டு வர நானுமில்லை...
- தென்றல் G
******************************************************************************
தண்டனை
கவி புனையும்
உன் விரல்களுக்கு
விடுமுறை அளிக்கவே
என் விரல்கள் கொண்டு
உன் விரல்களை
சிறை செய்கிறேன்..
விரல்களை
சிறை செய்தவனுக்கு
விழிச் சிறையில்
வினோத தண்டனை..
- தென்றல் . G
நங்கை அவள் மௌனம்
நர்த்தனம் பல ஆடிய
நங்கை உன் நயணங்களில் ...
கவி பல பாடிய
கண்மணி உன் உதடுகளில்....
உறைந்து உறவாடிடும்
மௌனம் போதும்
மௌனமாய் என்னை
மாய்த்துவிட...
பிரிவைத் தேர்வு செய்து,
பின் ஏன் இந்த கலக்கம்..
மெய்க்கோபம் கூட
பொய்த்து போகிறது,
நங்கை நின்
நயணங்களில்
கலக்கங்கள்
காண்கையிலே...
வலி தரும்
விழிகளுக்காக
கலங்குவதும் இந்த
காதலில் தான்...
காதலில் பிரிவு ,
காதலர்களின் இயலாமை...
காதல் தோல்வி இல்லை..
எனினும் உன் இயலாமை
என்னை வீழ்திவிட்டது..
அன்று
காதலில் வீழ்ந்தேன்..
இன்று..
இயலாமையில் விலகி
வீழ்கிறேன்..
- தென்றல் . G
********************************************************************************
என் ஏகாந்த கவிதை நீ
ஆயிரம் கனவுகளுக்கு
மத்தியில்
எனக்கே எனக்காய்
என்னுள் எழுந்த
ஏகாந்த கவிதை நீ.
உன் ஓர விழிப் பார்வையிலே
எனைத் தடுமாறச் செய்து
என் தடம் மாற்றிய
என் அழகிய தடுமாற்றம் நீ..
என் தனிமையை
களாவாடிடும்
நின் நினைவுகளுக்கு
ஓய்வளிக்கவே உன்
அருகாமை வேண்டும் எனை
சுயநலவாதி என்கிறாய்..
என் சுயமே நீ எனில்,
இருந்துவிட்டு போகிறேன்
சுயநலவாதியாய்..
- தென்றல் . G
******************************************************************************


















Comments
Post a Comment