Skip to main content

மயங்காதே மனமே- தென்கச்சி கோ சுவாமிநாதன்

✍️

மயங்காதே மனமே - தென்கச்சி கோ சுவாமிநாதன்

‘என்னை எவரும் அசைக்க முடியாது’ என்று சவால் விடும் மனிதர்கள் ஏராளம்! ஆனால், இவர்களின் நிலை இறுதிவரை இப்படியே இருக்குமா??

‘நம்மை, வேறு எவரோ ஒருவர் அசைத்துக்கொண்டு இருக்கிறார்!’ என்று எண்ணச் சொல்கிறது ஆன்மிகம். இந்த எண்ணமே அகந்தையைக் குறைக்க உதவுகிறது.

 ஷ்மெல்னோ என்ற யூத மத குரு ஒருவர், அந்த ஊருக்கு வந்தார். இதையறிந்த ஊர் மக்கள் ஒன்று கூடினர்.

 "நம்ம ஊருக்குப் புதுசா வந்திருக்கிற அந்த குருவை வரவேற்கணும். என்ன செய்யலாம்?" என்று கேட்டார் ஒருவர். 

"இன்று மாலை, அவருக்குப் பாராட்டு விழா நடத்துவோம்" என்றார் மற்றொருவர். 

அனைவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, குருவை நேரில் சந்தித்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். அவரும் சம்மதித்தார். 

அவ்வளவுதான்! அனைவரும் உற்சாகத்துடன் விழா ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தனர். அதே நேரம், அந்த குரு, ஓர் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டார். 

சிலர், அவருக்காக வெளியே காத்திருந்தனர். அறைக்குள் இருந்து ஏதேதோ சத்தம் வந்துகொண்டு இருந்தது! 

குரு, தனக்குத் தானே ஏதோ பேசுவது போல் இருந்தது. ஆனால், தெளிவாக யூகிக்க முடியவில்லை. ‘விழாவில் பேசவேண்டிய கருத்துகள் குறித்து ஒத்திகை பார்க்கிறார் போலும்’ என்பது சிலரது கருத்து. 

இன்னும் சிலரோ, "பேசிப் பழகுவதற்கு அவர் என்ன பள்ளி மாணவரா?" என்று கேள்வி கேட்டனர். 

சிறிது நேரத்தில், அறைக் கதவு திறந்தது. குரு வெளியே வந்தார். அனைவரும் அவரருகே வந்தனர்.

 "ஐயா! அறைக்குள் எதையோ திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தீர்களே, அதற்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டனர். 

அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "ஒன்றும் இல்லை. விழாவில், ‘இந்திரனே... சந்திரனே!’ என்றெல்லாம் என்னைப் புகழ்வீர்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டதும், எனக்கு அகந்தை வந்துவிடும். ஆகவே, இது போன்ற வார்த்தைகளை எனக்கு நானே பல முறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். இப்போது, இந்த வார்த்தைகள் எனக்குப் பழகி விட்டதால், விழாவில் நீங்கள் புகழ்ந்து பேசினாலும் எனக்கு கர்வம் ஏற்படாது அல்லவா?!"

 புகழ்ச்சியால் மனம் மயங்கும் நேரத்தில், ‘அகந்தை’ எனும் விருந்தாளி நாம் அழைக்காமலேயே உள்ளே வரக் கூடும். ஆகவே, எச்சரிக்கை தேவை. 

எலும்பு முறிவு ஆஸ்பத்திரியில் ஒருவர் படுத்துக் கிடந்தார். 

என்னாயிற்று அவருக்கு? ‘என்னை எவரும் அசைக்க முடியாது’ என்று சொல்லிக் கொண்டிருந்த அவரை, தரையில் கிடந்த வாழைப் பழத் தோல் ஒன்று அசைத்து விட்டதாம். 

இனி, அவர் அசைவதற்கு எவ்வளவு நாள் ஆகுமோ, யாருக்குத் தெரியும்?

மனமே மயங்கிவிடாதே.. அதுவே உன்னை சாய்த்துவிடும்...

Tamil quotes


Comments

Popular posts from this blog

குறும்பால் முளைத்த தென்னை மரம் - பர்மீய கதை

 இது ஒரு பர்மீயக் கதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு நாள் பர்மாவிருக்கு அருகே பர்மிஸ்ட் என்ற தீவிலிருந்து மூன்று பேரை கட்டுமரக் காரர்கள் பிடித்து வந்து அரசவையில் நிறுத்தினார்கள். அந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இருக்க , அரசர் அவர்களை பார்த்துவிட்டு " இந்த மூன்று பேரும் என்ன குற்றம் செய்தனர்? " என்று கேட்டார்.  அமைச்சர் ," அரசே.. இதை முதலில் நிற்கிறானே அவன் மக்களின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்தவன் , இந்த பெண் ஒரு சூனியக்காரி, மக்களை பயமுறுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்கினாள். இதோ இவன் சரியான குறும்புக்காரன். மக்களிடம் குறும்பு செய்து அவர்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோசம் கான்கிறவன். " என்றார். இதைக் கேட்ட மன்னர், தன் நிதியமைச்சரை அழைத்து , “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைஇந்த கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுத்துவிடுங்கள்.. அவர்கள் இருவருக்கும் இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள். வறுமையால் இவர்கள் குற்றம் செய்தனர்.அந்த வறுமையை நாம் ஒழித்துவிட்டால் இவர்கள் இனி குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் ...

கவிதை வரையும் ஓவியம்

  அன்று அவள்  கண் மை  எழுதிய கவிதை இன்று கண்ணீரில்  கரைகிறது.. கரையும்  கண்ணீரில் காதலின் வாசம்.. *********************************************************** அனுதினம் வாசலில் அவளிடும்  கோலம்..  ஒரு கவிதை வரையும்  ஓவியம் .  *********************************************************** காலப்போக்கில்  காணாமல் போன  உன் கடைசி  பொழுதுபோக்கு என் காதலோ... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலனே கேட்டுக்ககொள்..  காலம் பல கடந்தாலும்,  என் கவிதைகளின்  காப்புரிமை கூட  எனக்கே உரிமையில்லா என்  காதலுக்கு மட்டுமே..   வார்த்தைகள் எனதெனினும் அதன் வதனம் அவளல்லவா!!!

வெளவால் ஏன் தலை கீழ் தொங்குகிறது?? - பர்மீய கதை

🦇‘‘கனவில் கூட துரோகம் இழைக்க மாட்டார் என நட்பின் உறுதியைப் பற்றி கூறுவார்கள். இன்று அதெல்லாம் வெறும் கற்பனை. நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி விட்டிருக்கிறது.  🦇மனசாட்சி உள்ளவர்கள்தான் துன்பப்படுகிறார்கள். துரோகத்தின் வரலாறு மிக நெடியது.   🦇ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது.  🦇‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள் . 🦇விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது.  🦇ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன.  🦇 வெளவாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது.  🦇‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன. சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது.  🦇ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டா...