🥀
நங்கை அவள் மௌனம்
நர்த்தனம் பல ஆடிய
நங்கை உன் நயணங்களில் ...
கவி பல பாடிய
கண்மணி உன் உதடுகளில்....
உறைந்து உறவாடிடும்
மௌனம் போதும்
மௌனமாய் என்னை
மாய்த்துவிட...
பிரிவைத் தேர்வு செய்து,
பின் ஏன் இந்த கலக்கம்..
மெய்க்கோபம் கூட
பொய்த்து போகிறது,
நங்கை நின்
நயணங்களில்
கலக்கங்கள்
காண்கையிலே...
வலி தரும்
விழிகளுக்காக
கலங்குவதும் இந்த
காதலில் தான்...
காதலில் பிரிவு ,
காதலர்களின் இயலாமை...
காதல் தோல்வி இல்லை..
எனினும் உன் இயலாமை
என்னை வீழ்திவிட்டது..
அன்று
காதலில் வீழ்ந்தேன்..
இன்று..
இயலாமையில் விலகி
வீழ்கிறேன்..
- தென்றல் . G

Comments
Post a Comment