இது ஒரு பர்மீயக் கதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு நாள் பர்மாவிருக்கு அருகே பர்மிஸ்ட் என்ற தீவிலிருந்து மூன்று பேரை கட்டுமரக் காரர்கள் பிடித்து வந்து அரசவையில் நிறுத்தினார்கள். அந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இருக்க , அரசர் அவர்களை பார்த்துவிட்டு " இந்த மூன்று பேரும் என்ன குற்றம் செய்தனர்? " என்று கேட்டார். அமைச்சர் ," அரசே.. இதை முதலில் நிற்கிறானே அவன் மக்களின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்தவன் , இந்த பெண் ஒரு சூனியக்காரி, மக்களை பயமுறுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்கினாள். இதோ இவன் சரியான குறும்புக்காரன். மக்களிடம் குறும்பு செய்து அவர்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோசம் கான்கிறவன். " என்றார். இதைக் கேட்ட மன்னர், தன் நிதியமைச்சரை அழைத்து , “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைஇந்த கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுத்துவிடுங்கள்.. அவர்கள் இருவருக்கும் இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள். வறுமையால் இவர்கள் குற்றம் செய்தனர்.அந்த வறுமையை நாம் ஒழித்துவிட்டால் இவர்கள் இனி குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் ...
Comments
Post a Comment