Skip to main content

தொடர்கிறது முருகன் வள்ளியின் காதல் பயணம்- கதைக்களம்#5

❣️தொடர்கிறது... வள்ளி முருகன் காதல் பயணம்.

 எவ்வி அமைத்து தந்த, சந்தனப் பரணை விட்டு முருகனும் வள்ளியும் மறுநாள் பகல் பொழுதில் இறங்கி வந்தனர்.

 தலைநாள் இரவானது ஒரு ஆணும் பெண்ணும் தங்களை தானே அறிய தொடங்கும் நாளாகும். . இந்த இரவீன் குணம் பல காலங்களுக்கும் நீடித்திருக்கும்.. 

 காதல் அதை அறியும்பொழுது அதுவே அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் .

காதலின் அழைப்பை ஏற்று முருகனும் வள்ளியும் செல்லத் தொடங்கினர். கார்காலத்தின் மென் சாரல் காற்றி மிதந்து வந்து வள்ளியின் முகமெங்கும் நீர்பூசிச் செல்ல , இந்த வனத்தின் எந்த மலரோடும் ஒப்பிட இயலா அளவிற்கு வள்ளியின் முகம் பேரழகு கொண்டு மிளிர்ந்தது. வள்ளியின் முகம் நீங்கி பார்வையை திருப்ப முடியாது தனது விரல் கொண்டு அவள் முகம் துடைக்க கை நீண்ட நேரம் வள்ளி முருகனது முருகனது முகம் துடைத்துக் கொண்டிருந்தாள்.

என்ன அதிசயம் …வள்ளியின் கைகள் முருகன் முகம் தொட்ட கணமே வள்ளியின் முகம் நீங்கின நீர்த்துளிகள்..  

“இது எப்படி… எனது விரல் தொடுவதற்குள் உன் மேல் இருந்த நீர்த்துளிகள் எவ்வாறு மறைந்தன?” என்று கேட்டான் முருகன்.

“அது என் விரல்கள் உனது முகம் தொட்ட காரணத்தால்.”

முருகன் திகைத்து போய் பார்க்க, 

 “உன் தொடுதலில் நீ என்னுள் கடத்தும் ஆற்றல் என்னையே உருக்கும் பொது இந்த சிறு நீர்த்துளிகள் என்ன ஆகும்?” என்றால் வள்ளி.

‘தொடுவதின் மூலம் தான் ஆணின் ஆற்றல் பெண்ணின் கடக்கிறதாம் , ஆனால், தொடாமல் இந்த பெண் எண்ணுள் கடத்தும் ஆற்றலுக்கு இணை சொல்ல என்ன இருக்கிறது’ என்று மனதிற்குள் எண்ணியபடி, முருகன் முன் செல்ல வள்ளி " நாம் ஏன் வேங்கை மரத்தின் பரண் நீங்கினோம்?" 

“அது நமக்காக எவ்வி உருவாக்கியது. இருப்பினும் நமக்கான இடத்தை நம் கனவால் அல்லவா உருவாக்கிக் கொள்ள வேண்டும்.” என்று சொல்ல வள்ளியும் தலை அசைத்தாள் ' சரி ' என்பது போல்..

“வள்ளி… சென்ற முறை நான் உன்னை ஏழிலைப்பாலை மரம்த்திற்கு அழைத்துச் சென்றேன் அதனால் இந்த முறை நீ அழைத்துசெல்லும் இடத்திற்கு நான் வருகிறேன்” என்றான் முருகன்.

இந்த வனத்தின் ஏதோ ஒரு இணையற்ற இடத்திற்கு தான் அழைத்துச் செல்கிறாள் என்பதை அவளது முகத்தின் பூரிப்பு உணர்த்தியது. 

வள்ளியின் பின்னால் நடந்து கொண்டே 

“மானிலும் மயிலிலும் மட்டுமே ஆண் அழகு” என்றான் முருகன்.

“ உம்மைக் காணும் வரையிலும் நானும் அப்படித்தான் நினைத்தேன்...” என்றாள் வள்ளி நாணத்தோடு.

முன்னால் சென்று கொண்டிருந்த வள்ளி சற்று தொலைவில் விலைந்திருந்த பயிர்கள் தெரிய, அங்கு சென்றாள். ஒரு யானை படுத்துறங்கும் அளவு நிலத்தில் விலைந்திருந்த அந்தக் கதிர்களை தன் கைகளால் உருவியபடியே , “இது மிக அரிதான நெற்பயிர்." என்றும் " இதன் பெயர் "அன்னமழகியரிசி" என்றும் கூறினாள்.

 ஏணைய பயிர்கள் எல்லாம் பசியை மட்டுமே போக்கும் . ஆனால், இந்த அரிசி பசி நீக்குவதோடு, உடலையும் மலரச்செய்து சுகம் தரும். மனமே எப்போதும் மகிழ்வை உணர்கிறது. உடல் தன் தேவையை மட்டுமே உணர்கிறது. ஆனால் இப்பயிர் உடலையும் மகிழச்சியை உணரச் செயயும்.” என்று சொல்லிக்கொண்டே, உருவிய கதிர்களை தன் உள்ளங்கையில் கசக்கி முருகனுக்குக் கொடுத்தாள்.

 ‘ என் உடலும் மனமும் மகிழ்வால் ஏற்கனவே திளைத்திருக்க இதுவும் சேர்ந்தால், என் நிலைமை என்னாகுமோ?’ என்று எண்ணியபடியே முருகனும் பயிரை உண்டான்.

அண்ணமகிழரிசியை வள்ளியும் தன் வாயில் போட்டு மென்றபடியே நடந்து வர , வள்ளிக்கு விக்கல் வந்தது. கண்ணெட்டும் தூரம் அங்கே நீரோடையும் புலப்படவில்லை. வள்ளிக்கு விக்கல் நிற்காமல் வர உடனடியாக நீர் தேவைப்பட்டது. முருகன் யோசித்தான். உடனே அருகிலிருந்த சிறு பாறை ஒன்றின் மீது ஏறி நான்கு புறமும் பார்க்க அங்கே கானவெள்ளெருக்கு செழித்து வளர்ந்திருந்தது . அதன் திசை நோக்கி முருகன் ஓட வள்ளியும் அவ்விடம் ஓடி வந்தவள்  

“இங்கு எதற்காக ஓடி வந்தீர்கள்? ” எனக் கேட்டாள்.

“உனக்கு நீர் எடுக்க தான் வள்ளி..” எனச் சொல்லியபடி, அந்த வெள்ளெருக்கின் கீழிருந்த சிறுசிறு கற்களை நகர்த்தி, ஒரு குழியை உருவாக்கத் தொடங்கினான்.

“இந்த இடத்தில் நீர் கிடைக்குமா? எப்படிச் சொல்கிறீர்கள்?”

``காற்று கானவெள்ளெருக்கின் விதையைக் காட்டில் எல்லா இடமும் தூவி விட்டிருக்கும். எனினும் , வெள்ளெருக்கு இங்கு தானே முளைத்துள்ளது,வெள்ளெருக்கு நீரை உறிஞ்சும் செடி அன்று. அது நீரை குடிக்கும் செடி.அதனால் வெள்ளெருக்கு அதிக நீர் இருக்கும் இந்த இடத்தில் வளர்ந்திருக்கிறது'' என்று சொல்லிக்கொண்டே குழியை இரு முழம் ஆழப்படுத்த பாறையின் இடுக்கில் நீர் கசிந்தோடியது.

வள்ளி தன் இரு கைகளையும் பாறை இடுக்கின் அடியில் நுழைத்து, நீரை அள்ளிப் பருக அந்த நீரின் குளிர்ச்சி உடலெங்கும் பரவியது போல் இருந்தது. 

 “இந்த மண்ணுக்குள் நீர் இருப்பதும் என் மனதிற்குள் நீ இருப்பதும் முகம் பார்த்தால் தெரியாதா என்ன?'' என்று முருகன் சொல்ல, வள்ளி மீண்டும் நீறிண்டியே குளிர்ந்து போனாள்.

 “இந்தக் காதல் சற்றே தலைகீழானது வள்ளி. காதல்… அது நீர் இருக்கும் இடம் தழைக்கும் வேரன்று , காதல் .. அது , வேர் இருக்கும் இடம் சுரக்கும் நீர்.” என்று சொல்லிக்கொண்டே, வெலெருக்கின் அடியை சிறு கற்களை கொண்டு மூடினான் முருகன்.

மீண்டும் இருவரும் நடக்கத் தொடங்கினர்.

வள்ளி அழைத்துச் செல்லும் அந்த இடத்தைக் காண முருகனுக்குள் ஆர்வம் அதகரித்தது கொண்டே இருந்தது. அப்போது தொலைவில் பன்றிகளின் கூட்டம் ஒன்று செல்ல , அதை பார்த்த வள்ளி முருகன் இருவருக்கும் வெவ்வெறு சிந்தனை.

முருகன் ‘நான் அன்று விரட்டிச்சென்ற பன்றிக்கூட்டம் இதுதானோ?இந்த பன்றிகளை துரத்தி வந்ததால் தானே நான் அன்று என் வள்ளியைக் கண்டேன். என் காதலைக் கண்டு கொள்ள செய்த இவைகளுக்கு நான் காயத்தை தந்துவிட்டேனே?’ என்று எண்ணியவன் மீண்டும் வெள்ளெறுக்கஞ்செடி இருந்த திசை ஓடி மூடிய கற்களை அகற்றி,அந்த பன்றிகள் நீர் அருந்த வழிசெய்து வள்ளியின் அருகில் வந்தான்.

 “இந்த பன்றிகளின் மேல் செந்தாது படிந்திருப்பதைக் கண்டீர்களா?” கேட்டாள் வள்ளி. 

“நான் பன்றிகளின் உடலில் காயம் இருக்கிறதா என்பதைத்தான் பார்த்தேன். பன்றிகளின் மேல் இருந்த செந்தாது , நான் கவனிக்கவில்லை..”

“கார்காலத்தில் முதலில் மலரும் பூ செங்கடம்பு தான். அது மலரத் தொடங்கிவிட்டது போலும். செங்கடம்பு மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் கலந்த செந்நிறப் பூக்களின் மீது படுத்தெழுந்து வருவதால் இந்த பன்றிகளின் மேலெல்லாம் செந்தாது ஒட்டியிருக்கிறது.” என்றால் வள்ளி. 

வள்ளி சொன்ன பிறகுதான் பன்றிகளின் உடலில் இருக்கும் மயிர்க்கால்களில் செந்தாது பூசியிருந்ததை கவனித்தான். 

 பன்றிகளின் கூட்டம் நீர் அருந்திக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே “செங்கடம்ப மரத்தில் மாலைபோலத் தொங்கும் செங்கடம்ப மலரை உனது மார்பில் சூடும்படி அவை சொல்லிச் சொல்கின்றன” என்றாள் வள்ளி.

" செங்கடம்பு கொத்துப்பூ. அதை நான் எனது மார்பில் சூடிக் கொள்வதை விட, நீ உனது கூந்தலில் சூடுவதுதானே அழகு!” 

“அந்தக்கொத்துப்பூவின் இதழ்கள் எத்தனை அசைத்தாலும் உதிராதது, அசையா மணம்கொண்டதும் கூட…அதனால் தான் அந்த பூவை நான் உனது மார்பில் சூட ஆசைகொள்கிறேன்” என்றாள் வள்ளி.

`ஏன் இந்த உதிராத பூக்களை என் மார்பில் சூட ஆசை கொள்கிறாள்?இதிலும் ஓர் காரணம் வைத்திருப்பாளோ? ' என முருகன் நினைக்க, “அசைத்தால் உதிராத இதழ்கள் , அணைத்தாலும் உதிராது அல்லவா?”

முருகன் வார்த்தையின்றி திகைத்துதான் போனான்.. 

``நான் என் கூந்தலில் சூடும் என் ஒருத்திக்கு என்றாகிறது. ஆனால் நீ உன் மார்பில் அணியும் மலரானது நம் இருவருக்குமானதாகிறது.” சொல்ல நினைத்த சொற்களை மனதில் கொண்டு அவனிடம் எதும் சொல்லாமலே நடந்தாள் வள்ளி.

காதல் சொல்லாத சொற்களைச் சுவைத்துதான் வளர்கிறது. மனதின் ஆழத்தை அதன் எண்ணத்தை சொல்ல வாய்மொழி தேவையில்லை. சொல்லா சொற்களின் காதலின் ஆழத்தை ஆழ்ந்த அன்பைக் கடத்துவும் காட்டிடவும் வாய்முகப்பின் ஈரிதழ்கள் இருக்க வாய்மொழி எதற்கு.. 

வள்ளி முருகனின் இதழ்கள் அந்த அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த அதே வேளையில் " நான் அகழ்ந்து கண்டதை நீ எனை அணைத்து கண்டு கொண்டாய். நான் கண்டறிந்தது ஒருவருக்கானது எனில், நீ கண்டறிந்ததோ நம் இருவருக்குமானது. " முருகனின் மனச் சொல் மலர்ந்தது இவ்வாறாக.. இம்முறை சொல்லாத சொல்லை மனதில் இருத்தி நடந்தான் முருகன் வள்ளியை தொடர்ந்து.

ஒரு பாறை இடுக்குகளின் வழியே உள்நுழைந்த வள்ளியை ஒரு இருட்பிளவின் வழியே சென்றாள். ' வள்ளி இந்த இருட் பிளவில் எங்கே செல்கிறாள்?’ என்று எண்ணியபடியே முருகனும் அவளைத் தொட்ந்து சென்றான்.  

வள்ளி அங்கிருந்த ஒரு பெரும்பாறையின் முனை திரும்ப , முருகனும் பின்னால் அந்த பாறையை கடந்தது திரும்ப, அவன் அங்கு கண்ட காட்சியில் அசையாமல் அப்படியே நின்றுவிட்டான் . 

  வாழ்வில் இதுவரை பார்த்திராத ஒன்றை கண் முன்னே கண்டான் முருகன். 

எதைக் கண்டிருப்பான்?? அடுத்த பதிவில்..

sources:  Thiru சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள் பாரி.( ஆனந்த விகடன்) 




Comments

Popular posts from this blog

குறும்பால் முளைத்த தென்னை மரம் - பர்மீய கதை

 இது ஒரு பர்மீயக் கதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு நாள் பர்மாவிருக்கு அருகே பர்மிஸ்ட் என்ற தீவிலிருந்து மூன்று பேரை கட்டுமரக் காரர்கள் பிடித்து வந்து அரசவையில் நிறுத்தினார்கள். அந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இருக்க , அரசர் அவர்களை பார்த்துவிட்டு " இந்த மூன்று பேரும் என்ன குற்றம் செய்தனர்? " என்று கேட்டார்.  அமைச்சர் ," அரசே.. இதை முதலில் நிற்கிறானே அவன் மக்களின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்தவன் , இந்த பெண் ஒரு சூனியக்காரி, மக்களை பயமுறுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்கினாள். இதோ இவன் சரியான குறும்புக்காரன். மக்களிடம் குறும்பு செய்து அவர்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோசம் கான்கிறவன். " என்றார். இதைக் கேட்ட மன்னர், தன் நிதியமைச்சரை அழைத்து , “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைஇந்த கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுத்துவிடுங்கள்.. அவர்கள் இருவருக்கும் இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள். வறுமையால் இவர்கள் குற்றம் செய்தனர்.அந்த வறுமையை நாம் ஒழித்துவிட்டால் இவர்கள் இனி குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் ...

கவிதை வரையும் ஓவியம்

  அன்று அவள்  கண் மை  எழுதிய கவிதை இன்று கண்ணீரில்  கரைகிறது.. கரையும்  கண்ணீரில் காதலின் வாசம்.. *********************************************************** அனுதினம் வாசலில் அவளிடும்  கோலம்..  ஒரு கவிதை வரையும்  ஓவியம் .  *********************************************************** காலப்போக்கில்  காணாமல் போன  உன் கடைசி  பொழுதுபோக்கு என் காதலோ... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலனே கேட்டுக்ககொள்..  காலம் பல கடந்தாலும்,  என் கவிதைகளின்  காப்புரிமை கூட  எனக்கே உரிமையில்லா என்  காதலுக்கு மட்டுமே..   வார்த்தைகள் எனதெனினும் அதன் வதனம் அவளல்லவா!!!

வெளவால் ஏன் தலை கீழ் தொங்குகிறது?? - பர்மீய கதை

🦇‘‘கனவில் கூட துரோகம் இழைக்க மாட்டார் என நட்பின் உறுதியைப் பற்றி கூறுவார்கள். இன்று அதெல்லாம் வெறும் கற்பனை. நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி விட்டிருக்கிறது.  🦇மனசாட்சி உள்ளவர்கள்தான் துன்பப்படுகிறார்கள். துரோகத்தின் வரலாறு மிக நெடியது.   🦇ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது.  🦇‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள் . 🦇விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது.  🦇ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன.  🦇 வெளவாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது.  🦇‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன. சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது.  🦇ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டா...