Skip to main content

பெண்ணுடைய அணுக்கத்தால் மலரும் மரம்?? - கதைக் களம்#3

💞  வள்ளி முருகன் காதலோடு ஏழிலைப் பாலை மரமும் மலர்ந்தது.

Source: வீரயுக நாயகன் வேள்பாரி(ஆனந்த விகடன்)
படைப்பு: திரு. சு. வெங்கடேசன்


ஒருவாறு வள்ளியின் இருப்பிடம் கண்டறிந்து அவளைச் சந்தித்துப் பேசி, அவளின் சம்மதம் பெற நடந்த முயற்சிகள் எத்தனையோ. ஆனால், ஒன்றும் கைகூடவில்லை. இந்தக் காட்டில் அவள் அறியாதது என்று எதுவும் இருந்திருக்கவில்லை.. எனவே, எதைக்கொண்டும் அவளின் மனதில் தனித்த இடத்தைப் பெற முடியவில்லை. முருகன் என்ன தான் முயற்சி செய்தாலும், வள்ளி அவனை திரும்பிக்க்கூடப் பார்ப்பதாக இல்லை.

அப்போதுதான் எவ்வி முருகனுக்கு ஒரு ஆலோசனை சொன்னான். 


முருகனும் அவன் சொன்ன இடத்தில் வள்ளியை எதிர்கொண்டு பேசினான். இது தான் முதல் முறை அவள் அவனிடம் பேசியது. எனினும் அந்தப் பேச்சில் காதல் இருப்பதுபோல தெரியவில்லை. எதோ காட்டுக்குள் வழித்தவறிய ஆட்டுக்குட்டியை விசாரிப்பதைப் போல விசாரித்து வைத்தாள்...


மறுநாள் , எவ்வி வேறொரு யோசனை கூற வந்தபோது , முருகன் தடுத்துவிட்டான். “காதல், அது சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால் மட்டும் தான் கைகூட வேண்டும்” என்று சொல்லி புறப்பட்டு சென்று வழக்கம்போல வள்ளி செல்லும் வழியில் அவளைக் கண்டான்.


“வள்ளி..இன்று என்னோடு ஓர் இடத்திற்கு வருவாயா.. ” என்று அழைத்தான்.


அவளோ, " நான் தினைப்புலத்துக்குப் போக வேண்டும். என் தோழிகள் காத்திருப்பார்கள்'’ என்று காரணம் சொல்லி வர மறுத்தாள்.


“அதிக நேரம் இருக்க தேவையில்லை. சிறிது நேரத்தில் திரும்பிவிடலாம்” என வலியுறுத்தவே

வள்ளியும் “சரி” எனத் தலையாட்டினாள்.


முருகன், அவளை அழைத்துச் சென்றான். வழியில் இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. எனினும் கூச்சம் விடுத்து முருகன் மெல்ல பேச்சைத் தொடங்கினான்...


“ வள்ளி… உனக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள்.. வள்ளிக்கிழங்கு எடுக்கப் போகையில் உன் தாய் வலி வந்து உன்னை பெற்றெடுத்ததால், இந்த பெயர் என்கிறார்களே??அப்படியா??” என்றான்.


"அது ஊரில் சொல்லும் காரணம்" என்றும் "உண்மைக் காரணம் அது அல்ல” என்று மட்டும் சொல்லி நிறுத்தி காரணம் சொல்லவில்லை.


கல் மேல் கால் பதித்து அந்த சிறிய ஓடையை தாவித் தாவிக் கடந்து சென்றால் அந்த இடத்தில் தனியாக ஒற்றை மரம் இருந்ததை கண்டாள் வள்ளி.இங்கு என்ன இருக்கிறது என்று புரியாமல் பார்த்தாள்.

 

முருகன் வள்ளியுடம் " அந்த மர அடிவாரத்தில் போய் சிறிது நேரம் நில் " என்றான். வள்ளியும் முருகன் சொன்னபடி மரத்தின் அருகே செல்ல, முருகனோ, நீரோடையின் அருகில் இருந்த சிறு பாறையில் அமர்ந்து அவளைப் பார்த்தபடி இருந்தான்.


`எதற்கு இந்த இடத்தில் நிற்கச் சொல்கிறான்?' என்ற யோசனையிலேயே , மேலே பார்த்தாள். மரம் முழுவதும் காயும் மொட்டுமாக இருந்தன ஆனால் ஒரு பூ கூட இல்லை. `இது என்ன மரம்? இதுவரை நான் பார்த்ததில்லையே...’ என்று யோசித்தாள். மரத்தின் மீது தன் கை வைத்து, பட்டையை உரித்து முகர்ந்து பார்த்தாள். அது என்ன மணம் என்பதை அவளால் கண்டுகொள்ள இயலவில்லை.


“நின்றது போதுமா.. போகலாமா?” என்று கேட்டாள்.


முருகனோ, “இன்னும் சிறிது நேரம் இரு வள்ளி” என்றான்.


வள்ளியும் மரத்தின் மரப்பட்டைகளின் ஊடே எறும்பின் வரிசை ஒன்று போய்க்கொண்டிருந்ததை உற்றுப்பார்த்தபடி விரல்களால் பட்டைகளை மெள்ள வருடிக் கொண்டிருந்தாள். அச்சமயம் அவளுக்குள் ஓர் உள்ளுணர்வு.. ஆனால் அது என்னவென்று தெரியவில்லை.


“புறப்படலாம்” என்றான் முருகன்.


அவளும் முருகனுடன் நடந்து கொண்டே அந்த மரத்தை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தாள். ஆனால், முருகனிடம் எதுவும் அவள் கேட்கவில்லை. வள்ளியை எதிர்பார்த்து காத்திருந்த தோழிகள் சற்றே கோபித்துக்கொண்டனர்.


மறுநாள் பொழுது விடிந்தவுடன் முருகன் எங்கோ கிளம்பினான். “எங்கே?” என்று எவ்வி கேட்க , 

“ வள்ளியை நேற்று அழைத்துச் சென்ற இடத்திற்கு” என்றான்.


“மீண்டும் அதே இடததிற்க்கா?”


“ஆம் எவ்வி.... காரணத்தை பிறகு வந்து சொல்கிறேன் , நீ புதிய பரண் ஒன்று அமைத்துவை. நான் வரும்போது வள்ளியும் என்னுடன் வருவாள்” என்று சொல்லிச் சென்றான்.


எவ்வி வியந்து பார்த்தான். முருகன் வழக்கத்தைவிட சற்று அதிக உற்சாகத்தோடு வள்ளியை பார்க்க சென்றான்.


நேற்று சந்தித்த அதே இடத்திலேயே இன்றும் வள்ளியைக் கண்டான். ``வள்ளி.. சிறிது நேரம் என்னுடன் வா'’ என்று அழைத்தான்.வள்ளி தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி மறுத்தாள். முருகன் மீண்டும் மீண்டும் அழைக்க வள்ளியோ, “மரங்களில் எறும்பூறுவது என்ன அதிசயமா ” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.


“வள்ளி.. இந்த ஒருமுறை மட்டும் வா. இனி நானக உன்னை அழைக்க மாட்டேன்” என்றான் முருகன்.


அந்தக் குரலுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் ,

“சரி... இந்த முறை மட்டும் உன்னோடு வருகிறேன்” என்று சொல்லி முறுகனோடு புறப்பட்டாள். இருவரும் நேற்று சென்ற அதே வழியில் நடந்தனர்.


வள்ளி கேட்டாள்... “ உனக்கு ஏன் முருகு என்று பெயர் வைத்தார்கள்?”


“அது.. நான் மிகவும் அழகாக இருந்ததால், இந்தப் பெயரை வைத்ததாக எனது தாய் சொன்னாள்” என்று சொல்லும் போதே முருகனின் முகம் வெட்கத்தில் பூரித்தது.


“எங்கள் ஊரில் உள்ள எட்டு வகை கள் இருக்கிறது. அதில் ஒரு வகை கள்ளுக்கு கூட `முருகு' என்றப் பெயர் உண்டு” என்றாள் வள்ளி.


“அப்படியா.. கள்ளுக்கு எதற்கு இந்தப் பெயர் வைத்தார்களாம்?” என்று கேட்டான் முருகன்.


“தெரியவில்லையே. ஒரு வேளை அதற்கும் மயக்கும் தன்மை இருப்பதால் இந்தப் பெயர் வைத்திருப்பார்களோ என்னவோ” என்றாள் வள்ளி.


முருகன் திரும்பி அவளைப் பார்த்த போது தலை குனிந்திருந்த அவள் முகத்தில் படர்ந்த வெட்கத்தை மறைக்க முடியவில்லை.


இருவரும் பேசியபடியே அந்த நீரோடை அருகில் வந்திருந்தார்கள் . முருகன் வழக்கம்போல் ஓடையின் அருகில் இருந்த சிறு பாறையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். வள்ளி, மரத்தின் அருகே போக ஓடையைத் தாண்டி சென்று தலைதூக்கிப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து மெய் மறந்து நின்றாள். அவளால் அவளது கண்களையே நம்ப முடியமல் உறைந்துபோய், கண்ணிமைக்காமல் அந்த காட்சியைப் பார்த்தாள். 




ஆம் . எதிரில் நேற்று ஒரு பூ கூட இல்லாமல் இருந்த அதே மரம் இன்று மரம் முழுவதும் பூக்கள் பூத்துக் குலுங்கின. மஞ்சளும் நீலமும் கலந்த ஒருவண்ணத்தில் முயலின் காதைப்போல நீண்டு விரிந்தது அந்த மலர்கள். காற்றில் அந்த மரமே நிரம்பி வழியும் பூக்கூடையாக நின்று ஆடியது. ஒரு சிறிய இலை கூட தெரியாத அளவுக்கு பூக்களால் நிரிந்திருந்தது. அந்த மலரின் மனம் காற்று எங்கும் பரவி , அந்த இடமே நறுமணம் வீசி சென்றது. 'இது எப்படி நடந்தது ??' என்று நம்பவே முடியாத அந்த அதிசயத்தைப் பார்த்தபடியே இருந்த வள்ளி, திரும்பி முருகனைப் பார்த்து கேட்டாள்.


“நேற்று இந்த மரத்தில் ஒரு பூ கூட இல்லை . ஆனால் இன்று எப்படி இந்த மரம் எங்கும் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றனவே ?”


 “இந்த மரம் பெண்ணுடைய அணுக்கத்தால் மலரும் மரம். நேற்றய பொழுது நீ இந்த மரத்தை தொட்டுத் தழுவும் போது உன் மூச்சுக்காற்றை அதன் பட்டைகளும் கணுக்களும் நுகர்ந்தன. இதன் அத்தனை மொட்டுக்களுக்குள்ளும் உன் பெண்மை பாய்ந்து, பல ஆண்டுக் காத்திருப்புக்குப் பிறகு இப்போது பூப்பெய்தியுள்ளது. இதன் பெயர் ஏழிலைப் பாலை. இந்த காட்டில் உள்ள பத்து பேரதிசயங்களில் இதுவும் ஒரு அதிசயம்.” என்றான்.


'என்ன.. இந்த மொத்தப் பூக்களும் என்னுள் இருந்து மலர்ந்தனவா?' வள்ளியின் உடல் சிலிர்த்தது. அவளது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. உடனே ஓடிச்சென்று அந்த மரத்தைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.. மரப்பட்டைகளின் மீது இதழ் குவித்து முத்தமிட்டு, இறுகத் தழுவினாள். அவளது கண்களில் நீர் வழிந்தது. வள்ளி மெய்மறந்து கண்கள் செருகி நின்றாள். ஏழிலை பாலை மரம் குலுங்கி பூக்களை உதிர்த்தது அவள் மேல்...

இப்போது வள்ளியின் அணைப்புக்குள் இருந்தது முருகன். அவளது கரங்கள் இணைந்து ஆனந்தத்தில் முருகனின் கழுத்தை இறுக்கியது. அவளது கீழ் உதடு நடுங்க , அதன் விளிம்பில் இருந்த சிறு மச்சத்திலிருந்து முருகனின் பார்வை நகரவே இல்லை. இருவரது மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று மோதிக் காதல் அனல் காடெங்கும் அடிக்க, ஏழிலைப் பாலையும் சூடேறி தன் பூக்களை சொரிந்து அவர்களது உடல்களை மூடின. எனினும் உள்ளுக்குள் அவை மலர்ந்துகொண்டே இருந்தன.


முருகன் எவ்விக்கு தந்த பரிசு என்ன??

👇
முருகன் எவ்விக்கு தந்த பரிசு? 

Comments

Popular posts from this blog

குறும்பால் முளைத்த தென்னை மரம் - பர்மீய கதை

 இது ஒரு பர்மீயக் கதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு நாள் பர்மாவிருக்கு அருகே பர்மிஸ்ட் என்ற தீவிலிருந்து மூன்று பேரை கட்டுமரக் காரர்கள் பிடித்து வந்து அரசவையில் நிறுத்தினார்கள். அந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இருக்க , அரசர் அவர்களை பார்த்துவிட்டு " இந்த மூன்று பேரும் என்ன குற்றம் செய்தனர்? " என்று கேட்டார்.  அமைச்சர் ," அரசே.. இதை முதலில் நிற்கிறானே அவன் மக்களின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்தவன் , இந்த பெண் ஒரு சூனியக்காரி, மக்களை பயமுறுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்கினாள். இதோ இவன் சரியான குறும்புக்காரன். மக்களிடம் குறும்பு செய்து அவர்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோசம் கான்கிறவன். " என்றார். இதைக் கேட்ட மன்னர், தன் நிதியமைச்சரை அழைத்து , “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைஇந்த கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுத்துவிடுங்கள்.. அவர்கள் இருவருக்கும் இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள். வறுமையால் இவர்கள் குற்றம் செய்தனர்.அந்த வறுமையை நாம் ஒழித்துவிட்டால் இவர்கள் இனி குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் ...

கவிதை வரையும் ஓவியம்

  அன்று அவள்  கண் மை  எழுதிய கவிதை இன்று கண்ணீரில்  கரைகிறது.. கரையும்  கண்ணீரில் காதலின் வாசம்.. *********************************************************** அனுதினம் வாசலில் அவளிடும்  கோலம்..  ஒரு கவிதை வரையும்  ஓவியம் .  *********************************************************** காலப்போக்கில்  காணாமல் போன  உன் கடைசி  பொழுதுபோக்கு என் காதலோ... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலனே கேட்டுக்ககொள்..  காலம் பல கடந்தாலும்,  என் கவிதைகளின்  காப்புரிமை கூட  எனக்கே உரிமையில்லா என்  காதலுக்கு மட்டுமே..   வார்த்தைகள் எனதெனினும் அதன் வதனம் அவளல்லவா!!!

வெளவால் ஏன் தலை கீழ் தொங்குகிறது?? - பர்மீய கதை

🦇‘‘கனவில் கூட துரோகம் இழைக்க மாட்டார் என நட்பின் உறுதியைப் பற்றி கூறுவார்கள். இன்று அதெல்லாம் வெறும் கற்பனை. நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி விட்டிருக்கிறது.  🦇மனசாட்சி உள்ளவர்கள்தான் துன்பப்படுகிறார்கள். துரோகத்தின் வரலாறு மிக நெடியது.   🦇ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது.  🦇‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள் . 🦇விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது.  🦇ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன.  🦇 வெளவாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது.  🦇‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன. சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது.  🦇ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டா...